KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது.

இப்படம் நடிகர் விஜயின் சினிமா மாற்றும் அரசியல் வாழ்க்கையை கேலி செய்யும் விதமாக இருப்பதாக தவெக ஆதர்வாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து வில்லிவாக்கம் சட்டமன்ற வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா தனது விமர்சனத்தை இருந்தார். ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா தற்போது விளக்கம்கொடுத்துள்ளார்.

ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா

தம்பி ராமையா பேசியபோது இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சார், இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.

ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.

தம்பி ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள். மீடியா நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். பல ஆண்டுகளாக எங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முழுமையாக பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள். இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து, உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி – என் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.