ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றம் செய்த ஒருவரையும் விடக்கூடாது முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், திமுக தரப்பில் இருந்து முக்கிய தலைவர்கள் யாரும் பெரியளவு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக-வும் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் உள்ளது.

இந்த விவகாரத்தில் திமுக-வை மிக கடுமையாக விமர்சித்து வரும் தவெக இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

புதைகுழியில் தள்ளியது ஏன்?

மணி கொடுத்தால் எந்த மணியையும் காப்பாற்றும் அறிவாலய அறங்காவலரான மு.க.ஸ்டாலின், பாலியல்
பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் , வழக்கை புதைகுழியில் தள்ளியது ஏன்?

நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.

மணி கொடுத்தால் எந்த மணியையும் காப்பாற்றும் அறிவாலய அறங்காவலரான
மு.க.ஸ்டாலின், பாலியல்
பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் , வழக்கை புதைகுழியில் தள்ளியது ஏன்?

நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக… pic.twitter.com/qjABVa6Xwt

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 23, 2026

ரகுபதிக்கு அழுத்தம் தந்தது யார்?

இவ்வழக்கில் சாட்சியத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் தெளிவில்லை என்று முடிவெடுத்த அப்போதய சட்ட அமைச்சர் ரகுபதி, யாருடைய அழுத்தத்தால் இந்த வழக்கின் விசாரணை நீர்த்துப்போக துணை போனார், காரணம் என்ன?

யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்? உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது? தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பே புகார்:

ஜெம் வீரமணி வழக்கைப் பொறுத்தமட்டில் அவர் மட்டுமின்றி இதில் வேறு யாரும் முக்கிய புள்ளிகள் உள்ளனரா? என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் கடந்தாண்டு திமுக ஆட்சியிலே இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த விவகாரம் கடந்த ஒரு ஆண்டு காலமாகவே விசாரணையில் இருந்து வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. பெண்கள் பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் பரப்புரையில் பயன்படுத்திய விஜய், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.