"பார்கள் மீண்டும் ஓபன்!"... தஞ்சாவூரில் 33 டாஸ்மாக் பார்களுக்கு 2 மாதம் கூடுதல் அவகாசம்

3 months ago 6
ARTICLE AD

தஞ்சாவூர்: "பார் மூடப்பட்டாச்சே..." என்று கவலைப்பட்டிருந்த மதுபானப்பிரியர்களுக்கு தற்போது புதிய தகவலாக தஞ்சாவூரில் 33 டாஸ்மாக் பார்களுக்கு 2 மாதம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 33 டாஸ்மாக் மதுபான பார்களுக்கு மேலும் இரண்டு மாதங்கள் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பிறப்பித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 130 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 33 கடைகளுடன் இணைந்து, தனியார் உரிமத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வகையில் பார்கள் செயல்பட்டு வந்தன.

இந்த பார்களின் உரிமக் காலம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அவற்றை தொடர்ந்து நடத்த அனுமதி இல்லாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன.

பார்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, சில இடங்களில் மது வாங்கியவர்கள் கடைகளின் முன்பாகவும், சாலையோரங்களிலும் நின்று மதுபானம் அருந்திய காட்சிகள் அதிகரித்தன. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டது. "பார் மூடினால் பிரச்சினை குறையுமா, இல்லை சாலையோர கூட்டம்தான் அதிகரிக்குமா?" என்ற கேள்வியும் பல தரப்பினரால் எழுப்பப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண் இயக்குநரின் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் உரிமையாளர்களுக்கும் புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 33 டாஸ்மாக் பார்களும் மேலும் இரண்டு மாதங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உரிமம் காலாவதியானதால் மூடப்பட்ட பார்கள் மீண்டும் செயல்பட வழி ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த காலநீட்டிப்பு தானாக அமலுக்கு வராது. பார் உரிமையாளர்கள் உரிமைத் தொகையை செலுத்த வேண்டும். அதோடு ஜிஎஸ்டி வரி, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் பார் உரிமையாளர்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் கலவையான கருத்துகள் நிலவி வருகின்றன. ஒருபுறம் ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் மதுபானம் அருந்தும் வசதி மீண்டும் கிடைப்பதாக சிலர் வரவேற்க, மறுபுறம் மதுபான பார்கள் மீண்டும் திறக்கப்படுவதால் சமூக பாதிப்புகள் ஏற்படுமோ என்ற கவலையையும் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர். வரும் இரண்டு மாதங்களில் புதிய உரிமங்கள் வழங்கப்படுமா அல்லது நிரந்தர தீர்வு எடுக்கப்படுமா என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், டாஸ்மாக் பார்களில் குடித்துவிட்டு அங்கு ஏதாவது பிரச்சினையில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. மேலும் பார்களில் அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடக்கிறது. இதுபோன்ற செயல்களால் பல்வேறு குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். வழக்கு உட்பட பல்வேறு சட்டப்பிரச்சினைகளை எதிர்நோக்கும் குடும்பத்தினர் மனதில் பெரும் வெறுப்புதான் உருவாகிறது. பார்கள் மீண்டும் திறக்கப்படுவதால் பெண்கள், மாணவிகள் என்று பலரும் அந்தந்த பகுதியில் நடந்து செல்ல அச்சப்படும் நிலையே மீண்டும் உருவாகும் எனவே இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

Read Entire Article