பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!

1 year ago 7
ARTICLE AD

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், தன்னுடைய கணவரை மீண்டும் முதலமைச்சர் அரியணையில் ஏற்றி இருக்கிறார் கல்பனா சோரன்.

ஜம்மு காஷ்மீர், ஹரியானாவை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாாஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்த போதிலும், ஜார்க்கண்டில் படுதோல்வி அடைந்துள்ளது.

பாஜகவை ஓடவிட்ட "ஹெலிகாப்டர் மேடம்":

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 56 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஹேமந்த் சோரனை இந்தாண்டின் தொடக்கத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது.

அதற்கு சரியான பதிலடியாக, தன்னுடைய கணவரை மீண்டும் முதலமைச்சர் அரியணையில் ஏற்றி இருக்கிறார் கல்பனா சோரன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஹேமந்த் சோரனின் மனைவிதான் கல்பனா சோரன்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வெற்றியில் கல்பனா சோரன் முக்கிய பங்காற்றி இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 200 தேர்தல் பேரணிகளை நடத்தி, தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார் கல்பனா சோரன்.

சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி:

கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசியலில் நுழைந்த கல்பனா, மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஹேமந்துடன் இணைந்து முக்கியப் பங்காற்றினார். இதுகுறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "கல்பனா சோரனை 'ஹெலிகாப்டர் மேடம்' என்று பாஜக விமர்சித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட உள்ளூர்வாசி முனியா தேவியைப் போலல்லாமல் அவர் வெளிநாட்டவர் என்பதைக் குறிக்க பாஜகவால் இந்த பதம் உருவாக்கப்பட்டது" என்றார்.

இந்துத்துவா, ஊழல், ஊடுருவல் போன்ற பிரச்சனைகளை வலியுறுத்தி பாஜக பிரச்சாரம் செய்தபோதிலும், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், ஹேமந்த் சோரனும், அவரது மனைவி கல்பனா சோரனும், பழங்குடியினரின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக கச்சிதமாக பயன்படுத்தி மக்களின் மனதை வென்றுள்ளனர்.

கடைசி நேரத்தில், சீதா சோரன், சம்பாய் சோரன் மற்றும் லோபின் ஹெம்ப்ரோம் போன்ற முக்கிய தலைவர்கள், கட்சியில் இருந்து வெளியேறிய பிறகும், இமாலயா வெற்றி பெற்றிருக்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.

Read Entire Article