பாகிஸ்தான் நாட்டில் வீட்டில் இருந்த பட்டாசுக்கள் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து 250 கி.மீ தொலைவில் பலியாமண்டி பஹவுதின் என்ற கிராமம் உள்ளது.

அங்கு ஒரு வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளது.

இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு குழந்தை 4 பெண்களும் அடங்கும்.

மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மீட்பு படை அதிகாரி இம்ரான் கான் “வீட்டில் முதல் மாடியில் இரண்டு பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பஹவுதின் காவல் நிலைய அதிகாரி முகமது அக்ரம் ஹன்ஜன் பட்டாசு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு நபர், மூன்று பெண்கள், இரண்டு சிறுமிகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர். மற்றொருவர் அந்த பகுதியில் நடந்து வந்தவர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் உடல் நிலை ஸ்டேபிளாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

12லிருந்து 15 கிலோ வெடிபொருட்கள் வெடித்து சிதறியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக அக்டோபரிலும் ஒரு பட்டாசு விபத்தில், 7 பேர் உயிரிழந்தனர். அதேபோல், ஏப்ரல் மாதத்தில், இரண்டு தொழிலாளர்கள் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தனர்.