பஸ்ல கூட ஃப்ரீ தான்.. விமானத்தில் குழந்தைக்கு டிக்கெட் கேட்டதால் இளம்பெண் சண்டை!

2 months ago 11
ARTICLE AD

தெலங்கானா மாநிலத்தில் விமானத்தில் குழந்தைக்கு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண், ஊழியர்களால் இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கான பயணம்

பொதுவாக பேருந்து, ரயில்களில் குழந்தைகளுக்கென தனி டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதைப் பொறுத்து இலவசம், பாதி, முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில நேரங்களில் பேருந்துகளில் குழந்தைகளுக்கான டிக்கெட் தொடர்பாக நடந்துநர் - பயணி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படும். ஆனால் விமானத்தில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் கட்டணமில்லாமல் அல்லது மிக குறைந்த கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வித்தியாசப்படுகிறது. இப்படியான நிலையில் தெலங்கானா மாநிலத்தில் வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

குழந்தையுடன் பயணித்த பெண்

அங்குள்ள ஹைதராபாத்தின் ஷம்ஷாபாத் நகரில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்

விமான பயணம் மேற்கொள்ள ஒரு பெண் இங்கு வருகை தந்தார். அவர் தனது மகன் மற்றும் பேரனுடன் விமான நிலையத்திற்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்கு ரயில் அல்லது பேருந்து பயணத்திற்கு தனி டிக்கெட் தேவையில்லை என நினைத்த அந்த பெண் தனக்கும் தன் மகனுக்கும் மட்டுமே டிக்கெட் வாங்கியிருக்கிறார். பேரனுக்கு டிக்கெட் வாங்காமல் சென்றுள்ளார்.

ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் சோதனை எல்லாம் முடிந்துள்ளது. மூன்று பேரில் ஒருவர் குழந்தை என்பதால் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களும் அவர்களின் டிக்கெட்டை சரிவர பார்க்காமல் அனுமதித்துள்ளனர். அவர்கள் நேரடியாக விமானத்திற்கு சென்றனர். அங்கு சென்ற பிறகும் இந்த விஷயம் வெளியே தெரியவில்லை. பேருந்துகள் மற்றும் ரயில்களில் காலி இருக்கைகள் இருப்பது போல விமானத்தில் தங்கள் அருகில் இருந்த இருக்கையில் அந்த பேரனை அப்பெண் அமர வைத்துக் கொண்டார். நேரம் செல்ல செல்ல பயணிகள் வர தொடங்கினார்கள். அப்போது அந்த பேரன் அமர்ந்த இருக்கைக்கான பயணி வந்த பிறகு தான் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குழந்தைக்கு டிக்கெட் வாங்கணுமா?

குழந்தைக்கு விமான டிக்கெட் வாங்கவில்லை என்பதை உணர்ந்த விமானப் பணிப்பெண் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். குழந்தைக்கு இலவசம் என்ற ரீதியில் அப்பெண் எவ்வளவோ வாதாடி பார்த்தார். எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் மூன்று பேரையும் விமானத்தில் இருந்து இறக்கி காவல்துறையினரிடம் விமான அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், அந்த பெண் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு செல்லவிருந்தது தெரிய வந்தது. மேலும் முதல்முறையாக நாங்கள் விமானத்தில் செல்கிறோம். அதனால் சிறு குழந்தைக்கு கூட டிக்கெட் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். அவர்களின் அப்பாவித்தனத்தையும் அறியாமையையும் கவனித்த போலீசார் எந்தவித வழக்கும் பதியாமல் அனுப்பி வைத்தனர். எனினும் அவர்களின் பயணம் தடைபட்டது.

Read Entire Article