பழனி அருகே அதிமுக நிர்வாகி கார் மோதி இருவர் உயிரிழந்த நிலையில் விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகில் நேற்று அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி காரில் சென்றுள்ளார். அப்போது எதிரே கே.வேலூரை சேர்ந்த கருப்பணன் (55), சண்முகம் (40) இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மீது கார் மோதியதில் சம்பவ இடத்தில் கருப்புசாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சண்முகம் பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தார். இந்த நிலையில் போலீசார் முத்துசாமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். காரில் வந்து விபத்து ஏற்படுத்திய அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நிவாரணம் பெற்று தரக் கூறியும் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Abirami: கொண்டாட மறந்த சினிமா.. கமல் செய்த சிறப்பான சம்பவம்.. அபிராமிக்கு குவியும் பாராட்டு!

தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சட்டப்படி நடவடிக்கை இருப்பதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பழனி, திண்டுக்கல் சாலையில் நடந்த மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.