சென்னை, வண்டலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மாணவிக்கு பாலியல் தொல்லை:

சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்களை அழிக்க செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.

இதான் லட்சணமா?

முதலமைச்சர் விஜய் அவர்களே- உங்கள் ஆட்சியில் காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா? அரசுப்பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை உங்கள் காவல்துறை விசாரிப்பதை விட்டுவிட்டு, செய்தி வந்த மறுகணமே “தவறான செய்தி” என்று முந்திக்கொண்டு வந்து நிற்பது வெட்கக்கேடான செயல்.

ஆளாளுக்கு ஒரு சட்டமா?

சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்களை “Delete”…

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 25, 2026

தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் ஆட்சியில் காவல்துறையும் ரூட் மாபியா பாணியை கடைபிடிக்க உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? High Profile Cases என்றால் ஒரு சட்டம்,
சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?

காஸ்ட்லி முதலமைச்சர்:

காஸ்ட்லி முதலமைச்சர் என்று நான் இவரை சொன்னது இந்த மனோபாவத்தின் காரணமாக தான்! தற்போது இந்த அரசின் செயல்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் செய்தியே வரக்கூடாது என்று ஊடகங்களை மிரட்டும் இந்த புதிய பாயாச-பாசிச அரசுக்கு எனது கடும் கண்டனம்.

வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பை முன்னெடுத்து வரும் தவெக அரசு இதற்காக சிங்கப்பெண் சிறப்பு படை என்ற படையைத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டு சம்பவங்கள் குறித்து தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது.