அரூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் அரசநத்தம் கலசப்பாடி மலையில் காற்றாற்றில் வெள்ளப்பெருக்கு-ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றைக் கடந்த மலைவாழ் மக்கள்.

காட்டாற்று வெள்ளம் பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதி

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் வாச்சாத்தி அருகே உள்ள மலையில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு அத்தியாவசிய தேவைக்காகவும், மருத்துவமனை, கல்லூரிகள் இங்கு இருந்து சுமார் 7 கி.மீ தூரம் மலை மீது செல்ல வேண்டும்.

இந்த நிலையில் சித்தேரி மலை பகுதியில் 3 இடங்களில் காட்டாறு வருகிறது. இதில் மழைக் காலங்களில் எப்பொழுதுமே காற்றாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்படும்‌. ஆனாலும் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரியவர்கள் சிறியவர்கள் பெண்கள் என இந்த காற்றாற்றில் வருகின்ற வெள்ளத்தில் நடந்து சென்று தங்களது கிராமங்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக அரூர், சித்தேரி கோட்டப்பட்டி உள்ளிட்ட மலை பகுதியில் கிராமங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அரசநத்தம், கலசப்பாடி மலை மீது தொடர் மழை பெய்து வருவதால் காற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜேசிபி எந்திரம் மூலம் ஆற்றைக் கடந்த மலைவாழ் மக்கள்

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மலையை விட்டு கீழே இறங்கியவர்கள் மலை மீது ஏற முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனால் ஜேசிபி இயந்திரம் வரவழைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் மலைவாழ் மக்களை ஆற்றைக் கடந்து தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

அதேபோல் மலை மீது இருந்து கீழே இறங்கியவர்களும் காற்றாற்று வெள்ளத்தில் ஆற்றைக் கடக்கும் முடியாமல் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் இறங்கி சென்றனர்.

ஆனாலும் ஒருசிலர் காற்றாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல், ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடந்து சென்றனர். மேலும் அடிக்கடி மழைக் காலங்களில் இது போன்ற வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், மலை கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஊரை விட்டு வெளியே செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அலசநத்தம் கலசப்பாடி மலை கிராம மக்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் இது போன்றவை சிரமகத்துக்கு உள்ளாகி வருகிறோம் பலமுறை மனு கொடுத்துள்ளோம் ஆனால் இதுவரை இந்த பாலத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என எல்லா அத்தியாவசிய தேவைக்காகவும் நாங்கள் அருவருக்கும் தர்மபுரிக்கும் செல்ல வேண்டி இருக்கு காலையில் பணிக்கு சென்றால் மாலை மழை வந்த உடனேயே இந்த இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது அதனால் பணிக்கு சென்று வருபவர்கள் திரும்பி வீட்டுக்கு செல்லும்போது காட்டாற்றில் வெள்ளம் வருவதால் தவித்து வருகிறோம் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற சிரமத்தை நாங்கள் மேற்கொள்கிறோம் உடனடியாக இந்த காட்டாற்று வெள்ளத்தில் இருந்து எங்களை காப்பாற்றிய பாலம் அமைத்துக் கொடுத்தால் எங்கள் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் வெளியில் சென்று வீட்டுக்கு திரும்ப வசதியாக இருக்கும் என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்

எனவே இந்த பகுதியில் பாலம் அமைத்துக் கொடுத்தால் இந்த மலைவாழ்மக்களுக்கு வசதியாக இருக்கும் என வலியுறுத்துகின்றனர்.