பண்டிகை காலத்தில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு...20% வரை அதிகரிக்கும் பருவகால பணிகள்

1 month ago 2
ARTICLE AD

திருச்சி: நாடு முழுவதும் பண்டிகை கால விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு பருவகால மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்க உள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பண்டிகை காலத்தையொட்டி 15 முதல் 20 சதவீதம் வரை வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சுமார் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் பேர் வரை பருவகால அல்லது பகுதி நேர வேலைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்.எல்.பி. எனப்படும் நெக்ஸ்ட் லெவல் பிஸ்னஸ் சர்வீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்கூட்டியே பணியாளர்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்கள்

பண்டிகை காலங்களில் பொருட்களுக்கான தேவை திடீரென அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக இணையவழி விற்பனை, சில்லறை விற்பனை, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் விற்பனை அளவு கணிசமாக உயரும். இதனை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் கடைசி நேரத்தில் பணியாளர்களைத் தேடும் நிலையை தவிர்க்கும் வகையில், பண்டிகை கால விற்பனையை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்கத் தொடங்கியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

நிறுவனங்களுக்கு ஏற்படும் கடைசி நேர பணியாளர் பற்றாக்குறையையும், தகுதியான நபர்களை அவசரமாக தேர்வு செய்ய வேண்டிய அழுத்தத்தையும் குறைக்கும் வகையில், உயரதிகாரிகள் சுமார் 12 முதல் 14 வாரங்களுக்கு முன்பே பருவகால வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

எந்தெந்த வேலைகளுக்கு வாய்ப்பு?

பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகள் குறுகிய காலத்துக்குள் அதிகரிப்பதால், பொருட்களை தயாரிப்பது முதல் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு அவற்றை கொண்டு சேர்ப்பது வரை பல்வேறு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

குறிப்பாக,

வீடுகளுக்கு பொருட்களை கொண்டு சேர்த்தல்
கிடங்கு பராமரிப்பு
சில்லறை விற்பனை
வாடிக்கையாளர் சேவை
களப்பணி
வாடிக்கையாளர்களின் தேவைகளை கண்டறிதல்
பொருட்களை வகைப்படுத்துதல் மற்றும் பேக்கிங்
விநியோகப் பணிகள்

போன்ற செயல்பாட்டு பணிகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்பாட்டுப் பணிகளின் வளர்ச்சி விகிதம் பண்டிகை காலத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என என்.எல்.பி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2-ம் நிலை நகரங்களிலும் வேலைவாய்ப்பு

இந்த வேலைவாய்ப்பு அதிகரிப்பில் பெருநகரங்களை மட்டுமின்றி, 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களும் முக்கிய பங்கு வகிக்க உள்ளன. குறிப்பாக, மொத்த பருவகால வேலைவாய்ப்புகளில் 40 முதல் 50 சதவீதம் வரை வேலைகள் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் உருவாக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜெய்ப்பூர், லக்னோ, இந்தூர், சூரத், நாக்பூர், புவனேஸ்வர், கோவை, சண்டிகர், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் இதுபோன்ற வேலைவாய்ப்புகளுக்கு தேவை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி விற்பனை நிறுவனங்களில் அதிக தேவை

பண்டிகை கால விற்பனையில் இணையவழி விற்பனை தளங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அந்த நிறுவனங்களிலும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை நிறுவனங்கள் மற்றும் இணையவழி விற்பனை நிறுவனங்களில் பருவகால பணியமர்த்தல் நடைபெறுவதாக அறிக்கை கூறுகிறது.

பண்டிகைக்கு முன்பே பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விரைவாக வழங்க நிறுவனங்கள் திட்டமிடுகின்றன.

இளைஞர்களுக்கு குறுகிய கால வேலை வாய்ப்பு

பண்டிகை கால வேலைவாய்ப்புகள் பொதுவாக நிரந்தர பணியிடங்களாக இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்கு வழங்கப்படும் பருவகால அல்லது பகுதி நேர பணிகளாக இருக்கலாம். இதனால் வேலை தேடும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கூடுதல் வருமானம் தேடுபவர்களுக்கு குறுகிய கால வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அதே நேரத்தில், பண்டிகை கால விற்பனை அதிகரிப்பை நிறுவனங்கள் தவறவிடாமல் இருப்பதற்கும், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதிலும், ஆர்டர் செய்த பொருட்களைப் பெறுவதிலும் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கும் இந்த கூடுதல் பணியாளர் நியமனங்கள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் விற்பனைக்கு மட்டுமல்ல... ஆயிரக்கணக்கானோருக்கு தற்காலிகமாக வேலைவாய்ப்பை உருவாக்கும் காலமாகவும் மாறி வருகிறது என்பதையே இந்த தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

Read Entire Article