இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று பஜாஜ். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் இரு சக்கர வாகனத்திற்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Bajaj Avenger Cruise 220:

அதன் தரம், விலை, மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். பஜாஜ் நிறுவனத்தின் Bajaj Avenger Cruise 220 பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 54 ஆயிரத்து 215 ஆகும். இந்த பைக்கில் 220 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்:

இந்த பைக் ஒரு லிட்டருக்கு 39 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதன் டேங்கர் 13 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் ஆற்றல் கொண்டது. இந்த பைக்கின் இருக்கை உயரம் 737 மி.மீட்டர் ஆகும். இதில் 5 கியர்கள் உள்ளது.

நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் செல்வதற்கு இந்த பைக் மிகவும் ஏற்றதாக உள்ளது. 7000 ஆர்பிஎம் ஆற்றலும், 17.55 என்எம் டார்க் இழுதிறன் உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் தொலைவில் செல்லலாம். ஒரு கியரை கீழே இறக்கியும், 4 கியரை மேலே ஏற்றியும் கியர் மாற்ற வேண்டும். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 507 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

சிறப்புகள்:

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் உள்ளது. 17 இன்ச் முன்பக்க சக்கரமும், பின்பக்கம் 15 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப் டயர் பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக் வித் டபுள் ஆன்டி ஃப்ரிக்ஷன் புஷ் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சனும் உள்ளது. 163 கிலோ எடை கொண்டது. ரிசர்வ் மோடில் 3.8 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 75 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடங்கள் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல், ஃப்யூல் காஜ் டிஜிட்டல் பொருத்தப்பட்டுள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.

நகர்ப்புறங்களை காட்டிலும் நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கு இந்த பைக் இலகுவனதாக இருக்கிறதாக வாகன ஓட்டிகள் கருதுகின்றனர். பட்ஜெட் விலையில் ஏராளமான பைக்குகளை தயாரித்துள்ள பஜாஜ் நிறுவனம், இளைஞர்களை கவரும் வகையில் பல்சர் போன்ற பைக்குகளையும் தயாரித்துள்ளது. இந்த அவெஞ்சர்ஸ் பைக் ரெட்ரோ ஸ்டைல் பைக் ஆகும்.