அலறிய மதுரை.. பதறிய பொதுமக்கள்... யார் இந்த குட்டிசாக்கு என்ற சூர்யா?

1 hour ago 1
ARTICLE AD

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பட்டப்பகலில் கொலை,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலான கொலைகள் முன்விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளது. இந்த குற்றச்சம்பங்களை சுட்டிக்காட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அவ்வப்போது கொலை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மதுரையில் கொடூரமான கொலை ஒன்று அரங்கேறியுள்ளது.

சரித்திர பதிவேடு குற்றவாளி

மதுரை மாவட்டம் சமயநல்லூர் சடச்சியம்மன் நகரைச் சேர்ந்த 'குட்டிசாக்கு' என்ற சூர்யா. சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யா மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சூர்யா மது அருந்திக்கொண்டிருந்தார்.

முகம் சிதைத்து கொலை

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரைப் பயங்கர ஆயுதங்களால் சுற்றி வளைத்து சல்லி சல்லியாய் வெட்டியுள்ளது. இதில் அவரது முகம் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது. அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

பழிக்குப் பழி?

இந்த சம்பவம் தொடர்பாக சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த பழிக்குப் பழி கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும், தப்பி சென்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article