சீர்காழியில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த மைய பகுதியில் சகோதரர்கள் மூன்று பேரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள் வெட்டி சென்ற சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் ஏற்படுத்தியுள்ளது.

வெட்டபட்ட சகோதரர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் 40 வயதான மதன். இவர் சீர்காழி சட்டநாதர் கோயில் அருகே தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று சீர்காழி பிடாரி தெற்கு வீதி அருகே உள்ள டீக்கடை அருகே மதன் நின்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மதனை அடித்து, ஆடைகளை கிழித்து எரிந்து அவரது கால், உடல் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் கொடுரமாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மதனை அனுப்பி வைத்தனர்.

மீன் பிடித்த நபருக்கு வெட்டு

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மதனின் சகோதரர் முறை உறவான 33 வயதான மணிகண்டன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் சீர்காழி உப்பனாற்று இடது கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் மணிகண்டன் கரையில் நிறுத்தி வைத்திருந்த அவருடைய இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு, ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சுரேஷை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

காயம் அடைந்த மணிகண்டன் மற்றும் சுரேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். ஏதேனும் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் மூன்று பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பட்ட பகலில் சீர்காழி காவல் நிலையம் மற்றும் சீர்காழி புதிய பேருந்து நிலையம், தாலுக்கா அலுவலகம் அருகில் அதிக மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் அச்சமடைய செய்துள்ளது.

மேலும் இது தொடர்பாக சிலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த மதனுக்கும், அதே தெருவை சேர்ந்த முதியவருக்கும் ஒருவர் தள்ளுவண்டி கடை போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த மதன் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து அந்த முதியவரை அடித்துள்ளனர். இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் முதியோர் புகார் அளித்துள்ளார்.

போலீசார் புகார் பெற்றுக்கொண்டு புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த முதியவரின் மகன் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து மதன் மற்றும் அவரது சகோதரரை பட்டமகலில் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் சரமாரியாக கத்தியால் குத்தியும், இரும்பு பைப்பாலும் அடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் முகத்தை மறைத்து மதன் என்பவரை பிரதான சாலை ஓரம் அடித்து போட்டு சட்டையை கிழித்து போடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.