46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி மற்றும் கமல் இணைந்து இப்படத்தில் நடிக்க உள்ளனர். தற்போது உருவாகும் ப்ரோமோ தேர்தலுக்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ராஜ்கமல் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி சோலோவாக நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரஜினி கமல் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். ஜெயிலர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி மற்றும் கமல் இணைந்து திரையில் தோன்ற இருக்கிறார்கள். இதனால் இரு தரப்பு ரசிகர்களிடமும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ப்ரோமோ படப்பிடிப்பு

இப்படத்தின் ப்ரோமோ இன்று படமாக்கப்படுகிறது. நெல்சனின் முந்தைய படங்களின் ப்ரோமோவைப் போலவே நகைச்சுவை மற்றும் மாஸ் கலந்த ப்ரோமோவாக ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக இந்த ப்ரோமோவை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்த ப்ரோமோவில் நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் நடிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே ரஜினியை வைத்து ஜெயிலர் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரு படங்களில் நெல்சன் பணியாற்றியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசனை நெல்சன் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் காட்டப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.