நெருங்கும் தேர்தல்.. அடித்து ஆடும் இபிஎஸ்.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

5 months ago 4
ARTICLE AD

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதற்கட்டமாக வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை, கோவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

அடித்து ஆடும் இபிஎஸ்:

இதுகுறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, 7.7.2025 முதல் 21.7.2025 வரை முதல் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

தேதி

மாவட்டம்

சட்டமன்ற தொகுதி

07.07.2025

கோவை புறநகர் வடக்கு

மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம்

08.07.2025

கோவை மாநகர்

கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு

10.07.2025

விழுப்புரம்

விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம்

11.07.2025

விழுப்புரம்

வானூர், மயிலம், செஞ்சி

12.07.2025

கடலூர் வடக்கு

கடலூர் பண்ருட்டி

14.07.2025

கடலூர் தெற்கு

குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம்

15.07.2025

மயிலாடுதுறை

சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை

16.07.2025

திருவாரூர்

நன்னிலம், திருவாரூர்

21.07.2025

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை, பேராவூரணி

எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்:

'எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின்' போது சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். எடப்பாடி K. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்தச் சுற்றுப் பயண அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!

Read Entire Article