தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மது வாங்குவதில் ஏற்பட்ட போட்டியில் வாலிபரை பாட்டிலால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கூடலுார் பகுதியை சேர்ந்த ரகுநாதன் மகன் விஜய்,25, இவர் தாலுகா போலீசில் குற்றசரித்தர பதிவேடு குற்றவாளி. இவர் கடந்த சனிக்கிழமை தனது நண்பர்களுடன் நடுக்காவேரி அருகே மணகரம்பை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றுள்ளார். அந்த டாஸ்மாக்கில் கும்பல் அதிகம் இருந்துள்ளது.

இந்நிலையில், நடுக்காவேரி பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் அருள்குமார் (28). இவர் நடுக்காவேரி போலீசாரின் குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளி. இவரும் அதே டாஸ்மாக் மதுபான கடைக்கு வந்துள்ளார். இருவரும் கூட்டம் அதிகம் இருந்த நிலையில் யார் முந்திக் கொண்டு மது பாட்டில்கள் வாங்குவது என்று தகராறு செய்துள்ளனர். இதில் அருள்குமார் நான் இந்த ஊரை சேர்ந்தவன். அதனால் நான்தான் முதலில் வாங்குவேன் என்று பிரச்னை செய்துள்ளார்.

இதனால், அருள்குமார், விஜய் இருவருக்கும் யார் முதலில் மதுவாங்குவது என்பதில் தகராறு ஏற்பட்டது. பிறகு அருள்குமார், விஜய் ஆகிய இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு கிடந்த காலி மதுபாட்டிலை உடைத்து அருள்குமார், விஜய்யை குத்தினர். இதில் விஜய் படுகாயமடைந்தார். அருண்குமார் அவரது நண்பர்கள் தப்பியோடினர்.

இதுகுறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த நிலையில் இருந்த விஜய்யை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, அருள்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நடுக்காவேரி பகுதியில் மறைந்திருந்த அருள்குமாரை போலீசார் கைது செய்தனர். இருந்தவரை கைது செய்தனர்.

மணக்கரம்பை டாஸ்மாக் மதுபான கடையில், கடந்த ஆண்டு ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த மதுபான கடையை அகற்ற வேண்டும். இப்பகுதியில் மதுபானக்கடை இருப்பதால் பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இந்த மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.