தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. குறிப்பாக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். அதில் பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு,சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி தேனி மாவட்டம், தேவாரம், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேவாரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ. ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே. சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே. சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பெரியகுளம் நகா் சுதந்திர வீதி, வடக்கு அக்ரஹாரம், தெற்கு அக்ரஹாரம், வாகம்புளி, தென்றல் நகா், இடிகடிலாட், முத்துராஜா தெரு, என்ஜிஓ குடியிருப்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் திறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனியை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதிகளிலும் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நத்தம் மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் புண்ணியராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்

நத்தம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, சேத்தூா், ஊராளிபட்டி, அரவங்குறிச்சி, செல்லப்பநாயக்கன்பட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிப்பட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்

* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.

* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.

* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.

* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.

* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.

* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.