நீட் தேர்வில் அடித்து தூள் கிளப்பிய அரசு பள்ளி மாணவர்கள்... சாதனை படைத்த விழுப்புரம்

5 months ago 5
ARTICLE AD

விழுப்புரம்: மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வில் விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 77 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வு

இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956-ன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது. இதன்படி 5 மே, 2013 முதல் இந்த  நடத்தப்படுகிறதுது. 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது.

அரசு பள்ளி மாணவர்கள் 77 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி, காகுப்பம் அரசு பொறியியல் கல்லுாரி, அண்ணா அரசு கலை கல்லுாரி, எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 4 மையங்களில் நடந்தது. இதில், 1,300 மாணவர்கள், 2,877 மாணவிகள் என மொத்தம் 4,177 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்,  4,056 பேர் தேர்வெழுதினர். 121 பேர் தேர்விற்கு வரவில்லை.

காலை 11:30 மணி முதல் மாணவ, மாணவியர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையம் வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்கு பின் ஹால்டிக்கெட், ஆதார், இரு போட்டோ மற்றும் ஒரு வாட்டர் பாட்டிலுடன் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்பட்டது. மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையங்களின் கேட் மூடப்பட்டது. 2:00 மணிக்கு துவங்கிய நீட் தேர்வு மாலை 5:20 மணி வரை நடந்தது.

இந்த நிலையில்,  விழுப்புரம் மாவட்டத்தில், பூந்தோட்டம் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிகளில், நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தது. நீட் தேர்வு எழுத விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 502 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு முடிவில், அரசு பள்ளி மாணவர்கள் 9 பேர், 68 மாணவிகள் என மொத்தம் 77 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Read Entire Article