<p> நீட் குளறுபடி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். </p>
<p>இதுகுறித்து சென்னை திநகரில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை தான் நடத்துகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு குளறுபடி குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு தவறு நடத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரையும் பாதுகாக்க விரும்பவில்லை. </p>
<p>பிரியங்கா காந்தி பகிர்ந்த வீடியோவில் ஆயிஷி படேல் என்ற மாணவி நீட் பற்றி கூறிய புகாரை அலகாபாத் உயர்நீதிமன்றம் பொய் என கூறியுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை 2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு சிறப்பான ஆண்டு. கிரேஸ் மதிப்பெண் கொடுத்ததை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதனால் கிரேஸ் மதிப்பெண் கொடுபதை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்துள்ளது. மதுவிலக்குத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். </p>