நீங்க இருங்க முதல்வரே.. நாங்க பேசிக்குறோம்.. திமுகவை எதிர்க்கும் காங்கிரஸ்.. சரமாரி பதிலடி!

1 week ago 3
ARTICLE AD

மேகதாது அணைகட்டும் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைதியாக இருப்பதாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ளது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். அதேசமயம் திமுகவுடன் தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தலுக்கு பின் அந்த கூட்டணியை முறித்து தவெகவுடன் கைகோர்த்தது. அதுமட்டுமல்லமால் தமிழக அமைச்சரவையிலும் இடம்பெற்றது. காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக திமுக தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடியும் கொடுக்கப்படுகிறது.

திமுகவும், காங்கிரஸூம் பாரம்பரியமிக்க, தங்களுக்கென நீண்ட வரலாற்றை கொண்ட கட்சிகள். அப்படியிருக்கும்போது இருகட்சிகளும் எதிர்த்தரப்பில் பிளஸ், மைனஸ்களை நன்கு அறிந்துள்ளது. இந்த சூழலில் புதிதாக அரசியல் களம் கண்டு ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு திமுகவின் பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் சற்று திணறி வருகின்றது. இந்த சூழலில் தவெகவுக்கு உதவி செய்யும் வண்ணம் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கர்நாடக அரசின்  மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.ஷிவகுமார் பேசியிருந்தார். இதனால் காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு தவெக தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் பதிலளிக்கப்படவில்லை.

ஆனால் காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர், முதலமைச்சர் விஜய் மற்றும் கர்நாடகா காங்கிரஸ் மீது விமர்சனம் வைத்த கே.என்.நேருவை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேரு அவர்களுக்கு , 20 நாட்களுக்கு முன் நாங்கள் உங்களுடன் இருந்தபோது எந்த குற்றச்சாட்டும் இல்லை. இன்று திடீரென காங்கிரஸை குறிவைக்கிறீர்கள். இது மலிவான அரசியல். கர்நாடக தலைவர்கள் தங்கள் மக்களுக்காக போராடுகிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸும் தமிழக விவசாயிகளுக்காக எப்போதும் நிற்கும். போராடும். காவிரி உரிமையை காக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். தமிழக காங்கிரஸ் தலைவர் வாழபாடியார் மத்திய அமைச்சர் பதவியை துறந்த வரலாறு மறக்க வேண்டாம். இந்த மலிவான அரசியல் வேண்டாம் “ என தெரிவித்துள்ளார்.

இதனால் திமுக தரப்பில் இருந்து தவெக அரசுக்கும், கூட்டணிக்கும், முதலமைச்சர் விஜய்  மீதும் ஏதேனும் விமர்சனம் முன்வைக்கப்பட்டால் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article