நியுயார்க்கில் சிறந்த திரைப்பட விருது வென்ற அங்கம்மாள்... கவனமீர்க்கும் கீதா கைலாசம்

5 months ago 5
ARTICLE AD

கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள்

சமீபத்திய நியூயார்க் இந்திய திரைப்பட விழா ( New York Indian Film festival - NYIFF ) 2025 இல்,  சிறந்த நடிகைக்கான பரிந்துரையை கீதா கைலாசமும் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரையை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய
''அங்கம்மாள்" திரைப்படமும் பெற்றிருந்த நிலையில், அவ்விழாவின்  சிறந்த திரைப்படமாக அங்கம்மாள் தமிழ் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது .

இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ' கோடித்துணி' என்ற  சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்றை திரைப்படமாக எடுத்து, அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெறுவதும் பெருமைக்குரியது  என படக்குழு மகிழ்சி தெரிவித்துள்ளது. இப்படத்தில் அங்கம்மாள் என்ற பாத்திரத்தில் கீதா கைலாசமும், அவருடன்  (வடசென்னை, மெய்யழகன்) சரண்,  ( நாடோடிகள்) பரணி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நியூயார்க் விருதை தொடர்ந்து இப்படத்தின் மீது திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

யார் இந்த கீதா கைலாசம்

சமீப காலமாக தொடர்ச்சியாக பல சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்து வருகிறார் கீதா கைலாசம். தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள ஸ்டார் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மகன் பால கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம். எழுத்தாளரான இவர் தற்போது பல்வேறு குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியின் மனைவியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கலையசனின் அம்மாவாக கலக்கல் பர்ஃபாமன்ஸ் வழங்கி இருந்தார் என்றே சொல்லலாம்.

தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், லவ்வர் படத்தில் மணிகண்டனின் அம்மாவாக,  ஸ்டார் படத்தில் கவினின் அம்மாவாக என இன்றைய தலைமுறையினரின் மனதில் செண்டிமெண்ட் அம்மாவாக இடம்பிடித்துள்ளார் கீதா கைலாசம்.

இந்தப் படங்கள் தவிர்த்து வெந்து தணிந்தது காடு, வீட்ல விசேஷம், டியர், இன்ஸ்பெக்டர் ரிஷி, நவரசா, கட்டில், அனல்மேலே பனித்துளி உள்ளிட்ட படங்கள் மற்றும் இணைய தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Read Entire Article