ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு காதலன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் செய்யப்பட்ட காதலனை விட்டுவிட்டு வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்ததால், கொலை சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் காதல் ஜோடி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் அருகே கிறிஸ்துவகண்டிகையை சேர்ந்த பாலு , வசந்தா தம்பதியரின் மகள் சௌந்தர்யா. சௌந்தர்யா ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் என்பவருடன், காதல் ஏற்பட்டு இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

வேறு ஆண் நண்பருடன் பழக்கம்

இருவரின் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவே இருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தம் நடந்த சில தினங்களிலே சௌந்தர்யா வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்தது, தினேஷூக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து பல முறை தினேஷ் எச்சரித்துள்ளார். இருப்பினும் சௌந்தர்யா தினேஷின் போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளார்.

காதலியை கொலை செய்த காதலன்

இந்நிலையில் நேற்று இரவு சௌந்தர்யா வீட்டில் பெற்றோர் இல்லாததை அறிந்த தினேஷ் அவரிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தினேஷ் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக சௌந்தர்யாவின் முகம், கை, கால் என சரமாரியாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சௌந்தர்யாவின் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆண் நண்பருடன் சௌந்தர்யா பழகி வந்ததே, இந்த கொடுர கொலைக்கு காரணம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நிச்சயம் செய்யப்பட்ட காதலியை காதலனே கொடுரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் தினேஷ் சரண் அடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறுக்கே வந்த விக்னேஷ்

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையை வட்டாரங்களில் விசாரித்தபோது: தினேஷ் மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு வீட்டாரின் ஒப்புதலுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் சௌந்தர்யாவுக்கு, விக்னேஷ் என்ற பாய் பெஸ்டி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு விக்னேஷ் மற்றும் சௌந்தர்யா இருவரும் காதலராக மாறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தினேஷுடன் பிரிந்து சென்று, விக்னேஷை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக பலமுறை தினேஷ் கண்டித்தும் சௌந்தர்யா கேட்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமும் நின்றுள்ளது. அதன் பிறகு விக்னேஷ் உடன் ஜாலியாக காதலை வளர்த்து வந்துள்ளார். இருசக்கர வாகனங்களில் இருவரும் வெளியில் செல்வது. தனிமையில் சந்தித்து விக்னேஷ் மற்றும் சௌந்தர்யா இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த தினேஷ் கொலை சம்பவத்தை செய்தார் என போலீசார் தெரிவித்தனர்.