உலக அளவில் மிக சிறந்த பழங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது ப்ளூபெர்ரி. ப்ளூபெர்ரி (Blueberry) வட அமெரிக்கா பகுதியை பூர்வீகமாக கொண்ட பழமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவின் கிழக்கு, மத்திய பகுதிகளில் இவை இயற்கையாகவே காணப்படுகின்றன. இதேபோன்று ஐரோப்பாவிலும் கடந்த நூற்றாண்டில் இந்த பழவகை அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே இந்த பழம் கிடைக்கிறது. இந்த பழத்தில் அதிகளவு சத்துக்கள் இருப்பதால், மக்கள் ப்ளூபெர்ரி பழத்தை தேடி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் ப்ளூபெர்ரிக் இருக்கும் சத்துக்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பழத்தில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?. ஆம் நம் ஊரில் தெருகடையில் கிடைக்கும் நாவப்பழத்தில் தான், இந்த சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

நாவல் பழத்தின் நன்மைகள் என்ன? Jamun Fruit

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாக நாவல் பழம் இருக்கிறது.‌ புரதம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இது தவிர மேலும் ஒரு சில சத்துக்களும் இந்த பழத்தில் உள்ளது.

ஆண்டிஆக்ஸிடன்ட்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் (Flavonoids) நிறைந்து காணப்படுகிறது. ஆன்டிஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, செல்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. இவை இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் பிற உடல்நலன்களை மேம்படுத்த உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின்-சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தோல் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்

நாவல் பழத்தில் உள்ள ஜம்போலின் என்னும் மூலப்பொருள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் செய்கிறது. இதன்மூலம் நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழங்களில் ஒன்றாக நாவல் பழம் இருந்து வருகிறது.

செரிமான பிரச்சனைக்கு தீர்வு

நாவல் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இது மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளான அஜீரணம், வாயு போன்றவற்றை குறைக்கிறது.

வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வருபவர்கள், நாவல் பழச்சாறில் சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். கல்லீரலுக்கும் உகந்த பழமாக பார்க்கப்படுகிறது.

இரத்த சோகை

நாவல் பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

கொழுப்பைக் குறைக்கும் நாவல் பழம்

நாவல் பழம் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. நாவல் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த தமனிகளை ஆரோக்கியமாக வைத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற அபாயங்களைத் தடுக்கிறது.

சிறுநீரகத்தை காக்கும் நாவல் பழம்

நாவல் பழ விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரைய வாய்ப்புள்ளது.

முகம் பளபளப்பாக இருக்க

நாவல் பழங்கள் சருமத்தில் ஏற்படும் வெண்புள்ளி நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றன. மேலும் சரும சுருக்கங்கள் தள்ளிப்போடப்பட்டு, மினுமினுப்பு அதிகமாகும். இதன் மூலம் முகம் பளபளப்பாக காணப்படும்.

கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

அலர்ஜி இருக்கலாம்

நாவல் பழம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சில சமயங்களில் சிலருக்கு ஒவ்வாமை அல்லது சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.