<p>இன்றைய ஐபிஎல் ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதேபோல, நியூசிலாந்து அணி வீரர் டேவன் கான்வாயை தங்களுடைய முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அவரை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கிய சிஎஸ்கே, அடுத்ததாக ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. சாமர்த்தியமாக செயல்பட்ட சென்னை அணி, ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. </p>