நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி

2 months ago 6
ARTICLE AD

தஞ்சாவூா்: நாம் இணைந்து தயாரிக்கக்கூடிய தேர்தல் அறிக்கையாக இது இருக்க வேண்டும் என்பதற்காகதான் உங்களை தேடி வந்துள்ளோம் என்று துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி பேசினார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு ஒன்றை  துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க தலைமை அமைத்தது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் , அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மாற்றுத் திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், ஆட்டோ பஸ் உரிமை யாளர்கள்,  பொது மக்கள் நலன் விழையும் அமைப்பு களுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமை வகித்தார். அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, தலைமைக்கழக செய்தி தொடர்பு தலைவர் இளங்கோவன் , அயலக அணி செயலாளர் அப்துல்லா, மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,  துரை சந்திரசேகரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் அனைத்து தரப்பினரிடமும் எம்.பி., கனிமொழி மனுக்கள் வாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: நம்முடைய முதலமைச்சர்  எல்லோருக்குமான ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். யாரையும் விட்டுவிடாத, அரவணைக்கக்கூடிய ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்குமான திட்டங்களை ஒவ்வொரு நாளும் வகுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே அந்தத் திட்டத்தை நிறைவேற்றி அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும், இந்தத் திட்டங்கள் தொடர வேண்டும் என்ற காரணத்திற்காக மக்களுக்கு இன்னும் என்ன தேவை இருக்கிறது என்று இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கக்கூடிய குழுவிடம், நீங்கள் மக்களைத் தேடிச் சென்று அவர்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு இந்தத் தேர்தல் அறிக்கையை மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும் என்று எங்களைப் பணித்திருக்கிறார்கள்.

உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை என்பது எப்பொழுதுமே எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு தேர்தல் அறிக்கை. ஏனென்றால் அந்தத் தேர்தல் அறிக்கையிலே நாங்கள் சொல்லக்கூடிய அத்தனையும் நிறைவேற்றிக் காட்டக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இன்று இல்லை தலைவர் கலைஞர் அவர்களுடைய காலம் தொட்டு நாங்கள் சொல்வதைச் செய்யக்கூடியவர்கள், செய்வதை மட்டுமே சொல்லக்கூடியவர்கள்.

உங்களைச் சந்தித்து, உங்களுடைய தேர்தல் அறிக்கையாக நாம் இணைந்து தயாரிக்கக்கூடிய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களைத் தேடி இந்தத் தேர்தல் அறிக்கைக் குழு வந்திருக்கிறது. உங்கள் கருத்துக்களை, உங்கள் கோரிக்கைகளை, நீங்கள் செய்ய நினைக்கக்கூடிய மாற்றங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்திலே கலந்து கொள்ள முடியாதவர்கள் TNManifesto.ai என்ற ஒரு போர்டல் இருக்கிறது.

அதன் வழியாக, அது பயன்படுத்துவதற்கு மிகச் சுலபமான ஒன்று. நீங்கள் எழுதலாம் அந்தப் போர்டலில் போய் நீங்கள் எழுதிச் சொல்லலாம். இல்லையென்றால் உங்களுடைய கருத்துக்களை வாய்மொழியாக அதோடு நீங்கள் பகிர்ந்து கொண்டால் அது உங்களுடைய கருத்துக்களை எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article