என்னை கடவுள் ராமருடன் ஒப்பிட்டு போஸ்டர்கள் வைத்தது வேதனை அளிப்பதாக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அமித் ஷாவை வரவேற்க ,வழிநெடுகிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் கடவுள் ராமருடன் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான்.

சேது சமுத்திரம் விவகாரத்தில் இராமபிரானைக் குறித்து தவறான முறையில் பேச்சுகள் வந்தபோது, சட்டமன்றத்திலேயே கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தவன் நான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் தாயாரைக் குறித்து சர்ச்சைப் பேச்சு எழுந்தபோதும், முதலில் அதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான்.

I was deeply distressed to learn that certain posters had depicted me in comparison with Lord Shri Ramar yesterday. I have always held the conviction that divine power can never, and should never, be equated with humans.

During the discussions on the Sethusamudram issue, when…

— Nainar Nagenthiran (@NainarBJP) August 23, 2025

நமது தெய்வங்களின் மீது நான் வைத்திருக்கும் பக்தியும், மரியாதையும் இவ்வாறாக இருக்கும்போது, என்னை வைத்தே இவ்வாறு சித்தரித்து புகைப்படம் வெளியிடுவதை நான் மிகக்கடுமையாக கண்டிக்கிறேன். இன்னொரு முறை இது போல நடக்காமல் இருப்பதை அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.