விழுப்புரம் : கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கதொகையும் நிலுவை தொகையும் தாமதமின்றி வழங்கவு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நானும் விவசாயி என கூறிகொண்டு சிலபேர் எதுவுமே தெரியாமல் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக பொன்முடி விமர்சனம் செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய் நல்லூர் அருகேயுள்ள பெரியசெவலை கிராமத்தில் அமைந்துள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025-26ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவையை திமுக துனை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மணிகண்ணன் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி., கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை திமுக ஆட்சியில் சிறப்பாக வழங்கப்படுவதாகவும் தற்போது 349 ரூபாய் உயர்த்தி உள்ளதாகபும், ஊக்கத்தொகை வழங்க 297 கோடி ரூபாயை ஒதுக்கி கரும்பு டன்னுக்கு 3500 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

சர்க்கரை ஆலைகளில் நேரடியாக கரும்பிற்கு பதிவு செய்து ஆலைகளுக்கு வழங்கும் விவசாயிகளுக்கு தனியாக விண்ணப்பிக்காமல் நேரடியாக ஊக்க தொகை வழங்கப்படும் என்றும் இலவச மின்சாரத்தினால் 16 லட்சம் விவசாயிகள் பபயனடைவதாக கூறினார். விவசாயிகள் நலன் கருதி நிலுவை தொகையும், ஊக்கத்தொகையும் உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் சிலர் பேர் நானும் விவசாயி என கூறிகொண்டு எதுவுமே தெரியாமல் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமியை சாடினார்.

எல்லா கால கட்டங்களில் விவசாயிகளை இரண்டு கண்களாக முதலமைச்சர் ஸ்டாலின் பார்ப்பதாகவும் கிராம புறம், விவசாயிகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் முதல்வரும் துனை முதல்வரும் துணை நிற்பார்கள் என தெரிவித்தார். 2025-26 ஆம் ஆண்டின் அரவை பருவதத்திற்கு 3 லட்சத்து 1000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கலை ஆலைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொன்முடு தெரிவித்துள்ளார்.