ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபரண்ட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளை கண்டறிய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.