உலகின் முன்னணி கார் நிறுவனமாக திகழ்ந்து வருவது டொயோட்டோ. அதிநவீன சொகுசு கார்கள் தயாரிப்பிலும் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்தியாவில் டொயோட்டோ நிறுவனத்தின் பிரபலமான சொகுசு காராக திகழ்வது Lexus LM 350. இந்தியாவில் மிகப்பெரிய பிரபலங்கள் பலரும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

விஜய்யின் LM 350h கார்:

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், தவெக தலைவருமான விஜய் இந்த காரையே பயன்படுத்தி வருகிறார். இந்த காரின் சிறப்பம்சங்கள், வசதிகள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம். இந்த காரில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

விலை:

இந்த கார் அடிப்படையில் ஒரு சொகுசு கார். எம்பிவி ரக காரான இந்த காரில் மொத்தமே 2 வேரியண்ட்கள் மட்டுமே உள்ளது.

1. LM 350h 7 STR VIP - 2.69 கோடி ரூபாய்

2. LM 350h 4 STR Ultra Luxury - 3.39 கோடி ரூபாய்

60 லிட்டர் டேங்க்:

இந்த கார் 2 ஆயிரத்து 487 சிசி திறன் கொண்டது. எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் ஓடும் ஹைப்ரிட் ரக கார் ஆகும். ஆட்டோமெட்டிக் வேரியண்ட் மட்டுமே இந்த காரில் உள்ளது. 190 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 239 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

சொகுசு வசதிக்காக இந்த கார் பிரபலங்களின் விருப்பமான காராக உள்ளது. இதன் உட்கட்டமைப்பு எந்தவொரு பயண களைப்பும் தெரியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டிருக்கும். 4 மற்றும் 7 சீட்டர்களில் இந்த கார் உள்ளது. பெட்ரோல் எஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. இந்த காரின் டேங்க் 60 லிட்டர் வரை பெட்ரோல் தாங்கும் திறன் கொண்டது.

14 ஏர்பேக்:

இந்த காரில் பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் சீட், ஏபிஎஸ், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், எஞ்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் வசதி கொண்டது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பு கருதி 14 ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ளது. 100 கிலோமீட்டர் வேகத்தை 9.1 நொடிக்குள் எட்டி விடும். மணிக்கு 190 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது.

மைலேஜ்:

இந்த கார் கருப்பு, வெள்ளி, சாம்பல், நீலம் ஆகிய நிறங்களில் உள்ளது. இந்த கார் 12 கிலோமீட்டர் முதல் 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 353. செ.மீட்டர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உ்ளது. வயர்லஸ் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லஸ் சார்ஜ்ர் வசதி உள்ளது. 21 ஸ்பீக்கர்கள் உள்ளது. 3டி சவுண்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி,ப்ளைண்ட் ஸ்பார்ட் மானிட்டர், எலக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபூயஷன், ப்ரேக் அசிஸ்ட் வசதி உள்ளது. ப்ரேக் ஹோல்ட், 3ஐ எல்இடி முகப்பு விளக்குகள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது.