கண்காட்சியில் பல விதமான கொலு மொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு மொம்மைகளுக்கும் 10% சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கொலு பொம்மை" சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை.

"பூம்புகார்" கைவினைப்பொருட்கள் உலகில் தனியதொரு இடத்தைப்பிடித்துள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவோம். பூம்புகார் என்ற பெயரால் அழைக்கப்படும். தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம், 1973ல் துவக்கப்பட்டு, தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருவதைப்போல இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு "கொலு பொம்மைகள்" என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை 23.09.26 முதல் 31.10.26 வரை (ஞாயிற்றுக்கிழமை உட்பட) தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய பூம்புகார் விற்பனை நிலையம், பிபி 10, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், கே. புதூர் மதுரை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியினை 23.09.2026 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட ஆட்சியர் மதுரை விழாவை துவக்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்கள்.

புதுவிதமான கோயில் மாதிரிகள்

இக்கண்காட்சியில் புதுவிதமான கோயில் மாதிரிகள், கள்ளழகர் சிலை, தசாவதாரம் செட், விநாயகர்செட் தர்பார்செட், அஷ்டலட்சுமிசெட், மும்மூர்த்திசெட், கிரிவலம் செட் கருடா சேவை செட், திருப்பதி செட், குபேரன் செட், வைகுண்டம் செட், எலி நடன செட், ஐயப்பன் பூஜை செட், சித்தர்கள் செட், கார்த்திகை பெண்கள் செட், பூரிஜெகனாதர் செட், ராமர் பட்டாபிசேகம் செட், நெல்லையப்பர் காந்திமதி செட், கோவர்த்தன கிரி செட், வாசுதேவர் செட் பள்ளிக்கூடம் செட்., குகன் ஓடம் செட், கோபியர் செட், வளைகாப்பு செட், தாயம் செட் உழவர் சந்தை செட், ஐந்திணை செட், ஜல்லிகட்டு செட். தஞ்சாவூர் பொம்மை, துலாபாரம் செட். அரசியல் தலைவர்கள், மரபாச்சி பொம்மைகள், சமையல்செட், பளிங்குதூள் பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், கொலு பரிசு பொருட்கள் இன்னும் எராளமான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. இந்த பொம்மைகள், தமிழ்நாடு, ஆந்திராவின் (கொண்டபள்ளி மற்றும் மரபொம்மைகள்), கர்நாடகா (சென்னப்பட்டணா), கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் விற்பனை

மேலும், கோபிநாத் கிருஷ்ணர், நவக்கிரக செட், ஆண்டாள் கிருஷ்ணர்.லிங்க வராகி, லட்சுமி குபேரர், பஞ்சமுக நரசிம்மர், பூரி ஜெகன்நாதர் செட், சாமி அலங்காரப் பொருட்கள், தமிழர்களின் வீர விளையாட்டு பொம்மைகள், முப்படை ராணுவ மொம்மைகள், அயோத்தி ராமர் போன்ற கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் பல விதமான கொலு மொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு மொம்மைகளுக்கும் 10% சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். இக்கண்காட்சி மூலம் ரூபாய் 30.00 இலட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. இக்கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள கைவினைப் பொருட்களை மதுரை மாநகர மக்கள் வாங்கி பயன் பெறுவதுடன் இக்கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கைவினைஞர்களுக்கு உதவுமாறு பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.