திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் செல்வம் இவருக்கு சொந்தமான ஆவிச்சிபட்டி அருகே பூலா மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் வெடி தயாரிக்கும் பணியில் சிவகாசியை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இருவர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விருந்து வந்த நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல் சிதறி பலியானதில் இறந்தவர்களின் விபரம் குறித்து அடையாளம் காண முடியவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலை மறைவாகி விட்டதால் அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பரபரப்பு! மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்! இஸ்லாமாபாத் செல்கிறாரா இந்திய பிரதமர்?

Watch Video : கலக்குறியே மாயா! உனக்குள் இப்படி ஒரு திறமையா... வாய் பிளக்க வைக்கும் வீடியோ

மேலும் சம்பவ இடத்தில் துணை கண்காணிப்பாளர் முருகேசன், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான 20 க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது