தஞ்சாவூர்: போனா வராது... விட்டா கிடைக்காது... நண்பாஸ் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. ரூ.50 ஆயிரம் வரை சம்பளமுங்கோ. உடனே உங்க விண்ணப்பத்தை அனுப்பிடுங்கோ. அட ஆமாங்க பிஎஸ்என்எல்-ல்தான் இந்த வேலைவாய்ப்புங்க.

மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை எதிர்பார்க்கிறவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 120 காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று 5-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிக்கிறது என்று முழுமையான விபரம் உங்களுக்காக...

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் -ல் 2026ம் ஆண்டு டெலிகாம் மற்றும் நிதி பிரிவில் உள்ள மூத்த நிர்வாகி பயிற்சி பெறுபவர்கள் பதவியில் காலியாக உள்ள 120 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நேற்று 5-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது.

பதவி: மூத்த நிர்வாகி பயிற்சியாளர் (Senior Executive Trainee), காலிப்பணியிடங்கள் -120, இணையதளம் https://internalexam.bsnl.co.in/. டெலிகாம் ஆப்ரேஷன் 95. நிதி 25 என மொத்தம் 120 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்காங்க.

இதில் பொதுப்பிரிவு - 16, எஸ்டி - 8, ஓபிசி – 31 என்ற முறைப்படி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் பொதுப்பிரிவு பொருளாதாரத்தின் பின்தங்கியவர்கள் - 51, மாற்றுத்திறனாளிகள் - 5 என நிரப்பப்படுகிறது.

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். அதிகபடியாக 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது. ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு உள்ளது.

டெலிகாம் ஆப்ரேஷன் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பொறியியல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல்/ தொழில்நுட்பம் (BE/B.Tech) பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண்கள் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எலெக்ட்ரிக்கல் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல் மற்றும் இன்ரூமெண்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் (அல்லது) இதனுடன் கூடிய வளர்ந்து வரும் தொழில்நுட்பப் படிப்புகளை இணைந்து படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

நிதி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு பட்டயக் கணக்காளர் (CA), செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல் (CMA) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கு கணினி வழியில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடத்தப்படும். கணினி வழித் தேர்வு என்பது கொள்குறி வகையில் நடைபெறும். இரண்டு பாகம் இடம்பெறும். முதல் பாகம் திறன் சோதனை தேர்வு 40 கேள்விகள் - 40 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பாகம் பணிக்கான தொழில்நுட்ப கேள்விகளுடன் இடம்பெறும். இதில் 160 கேள்விகள் - 160 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் தேர்விற்கு 180 நிமிடங்கள் அளிக்கப்படும். இத்தேர்வில் நெகட்டிவ் மார்க் உள்ளது. அதனால கேள்விகளை சரியாக பார்த்து பதில் அளிக்க வேண்டும்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். தொடர்ந்து, தற்காலிக தரவரிசை வெளியாகும். தொடர்ந்து, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நிர்ணயிக்கப்பட்ட தகுதி உள்ளவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் எங்கு வேண்டுமானாலும் பணி வழங்கப்படலாம். தேர்வாகும் நபர்களுக்கு 52 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

மூத்த நிர்வாகி பதவிக்கு பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு https://internalexam.bsnl.co.in/ என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.2,500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1,250 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போதே தேர்வு நகரத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

விண்ணப்பம் தொடக்கப்பட்டது-05.02.2026, விண்ணப்பிக்க கடைசி நாள்-7.03.2026,விண்ணப்பம் திருத்தம் அவகாசம் 08.03.2026 - 15.03.2026, தேர்வு தேதி 29.03.2026

இந்த வேலைவாய்ப்பை தகுதியுள்ளவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க. போனா வராது... அப்புறம் கிடைக்காது. தேர்விற்கான அட்மிட் கார்டு இணையதளத்தில் வெளியிடப்படும். மத்திய அரசு நிரந்தமான வேலை எதிர்பார்க்கிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு ஆகும். காலதாமதம் இல்லாம உடனே உங்க விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.