நடிகை ஆவதற்கு ஸ்கூல் டாப்பர் ஆக வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது தேவையில்லை என்பதை பின்னர்தான் உணர்ந்தேன் என நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கிஷ்கிந்தாபுரி. திரில்லர் படமான இது ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக துருவ் விக்ரமுடன் பைசன் படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனுபமா பரமேசுவரன் மலையாளத்தில் "பிரேமம்" படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் மிகவும் நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக "கொடி" படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது முட்டை காமெடி வெகு பிரபலம். இவர் "ஜோமோண்டே சுவிஷேஷங்கல்", "வுன்னாதி ஒகேட் ஜிந்தகி", "நடசர்வர்பௌமா", "கார்த்திகேயா 2", "18 பேஜஸ்" போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த முக்கிய திரைப்படங்கள் பிரேமம் (2015): மலையாளம், கொடி (2016): தமிழ், ஜோமோண்டே சுவிஷேஷங்கல் (2017): மலையாளம், வுன்னாதி ஒகேட் ஜிந்தகி (2017): தெலுங்கு, நடசர்வர்பௌமா (2019): கன்னடம், தள்ளிப் போகாதே (2024): தமிழ், கார்த்திகேயா 2 (2022): தெலுங்கு, டிராகன் (2025): தமிழ் என்று தனது கேரக்டர்களை வலுவானதாக பார்த்து செலக்ட் செய்து வெற்றிப் படங்களாக நடித்து வருகிறார்.

அனுபமா பரமேசுவரன் தெலுங்கு, மலையாளம், தமிழ், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழில் பைசன் படத்தை எதிர்பார்த்துள்ளார். இந்நிலையில், ஒரு நேர்காணலில் அனுபமா தன் பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும் போது நான் ஸ்கூல் டாப்பர் இல்லாததால் நடிகையாகவே முடியாது என்று பயந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதில் இருந்து... "சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் என் பள்ளியில், முதலிடம் பிடிக்கிறவங்களுக்குத்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், நன்றாக படிப்பவர்களால்தான் பெரிய வசனங்களை மனப்பாடம் பண்ணி சொல்ல முடியும். அது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

நான் ஸ்கூல் டாப்பர் இல்லை. நடிகையாகவே முடியாதுன்னு பயந்தேன். அதனால் நடிகையாக வேண்டும் என்ற என் கனவை ஒதுக்கி வைத்தேன். ஆனால் கொஞ்சம் வளர்ந்த பின் படிப்புக்கும் நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். அந்தளவிற்கு தான் இன்னோசென்ட் ஆக இருந்ததை மறைக்காமல் தெரிவித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.