நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு அவருக்கு.. ரசிகர்கள் கவலை

4 months ago 5
ARTICLE AD
<p>இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ராதிகா. இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. 80களில் சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார் ராதிகா. இவர் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரங்களே கிடையாது.&nbsp;</p> <p>வெள்ளித்திரையில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த ராதிகா சின்னத்திரையில் செல்வி சீரியல் மூலம் அறிமுகமாகி லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். தமிழ் சினிமாவில் ராதிகாவை கண்டு வியக்காதவர்கள் எவரும் இல்லை. இவர் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் களம் கண்டு தோல்வியுற்றாலும் நடிப்பை தனது மூச்சாக நினைத்து வாழ்ந்து வருகிறார்.&nbsp;</p> <p>இவர், தற்போது நடிகர்களுக்கு தாயாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராதிகாவுக்கு டெங்கு இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவர்கள் அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இன்னும் 4 நாட்கள் கழித்து வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
Read Entire Article