<p>தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்துள்ளது. </p>
<p>சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p>