நடிகர் தீனா - காவல் ஆய்வாளருக்கும் இடையே சாலையில் வாக்குவாதம் !! பரபரப்பு வீடியோ

சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்ட அம்பேத்கார் சிலை உள்ளது. இந்த இடம் எவரடி பேட்டரி கம்பெனிக்கு சொந்தமான இடத்தை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் வாங்கி அதனை பிளாட் போட்டு வைத்திருக்கின்றனர். இந்த சிலையை ஒட்டி உள்ள தியாகராஜபுரம் மக்கள் மற்றும் அம்பேத்கர் பற்றாளர்கள் சார்பாக சிலையின் பாதுகாப்பு கருதி சுற்று சுவரை எழுப்பி வந்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மண்டலம் அலுவலர் இந்த பணியை கைவிட வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார். இந்த தகவல் அறிந்த மண்டல குழு தலைவர் தனி அரசு அவர்கள் மண்டல அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இந்த சுற்றுச்சூழல் கட்ட அனுமதி அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் திருவெற்றியூர் காவல் ஆய்வாளர் ரஜினிஸ் மீண்டும் கட்டுமான பணிகளை நடைபெறக் கூடாது என்று கடந்த இரண்டு நாட்களாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் திரைத்துறை நடிகருமான சாய் தீனா மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்திற்கு சென்று கேட்டு இருக்கின்றனர்.

நீண்ட நேரமாக காவல் நிலையத்தில் காத்திருந்த நடிகர் சாய் தீனா மற்றும் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் மற்றும் ஊர் மக்கள் காவல் ஆய்வாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக போன் செய்திருக்கிறார்கள். அதற்கு காவல் ஆய்வாளர் நான் ரோந்து பணியில் இருப்பதாகவும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் இருப்பதால் தாமதமாகும் என காத்திருக்கும் படி கூறியிருக்கிறார்.

நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்களும் நடிகரும் காவல் நிலையத்திலிருந்து அம்பேத்கர் சிலை முன்பு ஒன்றிணைந்திருக்கின்றனர். அதற்குள் காவல் ஆய்வாளர் அந்த இடத்திற்கு வந்து ஏன் இங்கே நிற்கிறீர்கள் கிளம்புங்கள். எங்களுக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது அதனால் நீங்கள் கிளம்புங்கள் என காவல் ஆய்வாளர் கூறிய நிலையில் இதில் கோபமடைந்த நடிகர் தீனா யார் புகார் அளித்தாரோ அவரை இங்கே வர சொல்லுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் பொதுமக்களிடமும் மற்றும் நடிகர் சாய் தீனாவிடமும் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடிகர் சாய் தீனா செய்தியாளரை சந்தித்த போது ;

வடசென்னையில் மிக முக்கியமான சிலையாக நாங்கள் கருதப்படுகிறோம். முதல் சிலையும் இந்த சிலை தான் , இங்கு தான் எங்களுடைய நல்ல நாள் மற்றும் ஆர்ப்பாட்டம் நலத்திட்ட உதவிகள் இந்த சிலை முன்பு தான் நாங்கள் இதுவரை செய்து வருகிறோம். இந்த சிலையை நாங்கள் அனைத்து துறையிலும் அனுமதி பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு செய்து வருகிறோம்.

இது தொடர்பாக காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் இதனை காவல்துறை சரியாக விசாரிக்காமல் இருந்த நிலையில் இது குறித்து அம்பேத்கர் பற்றாளர்களும் ஊர் பொதுமக்களும் காவல் நிலையம் சென்று கேட்டோம். இதற்கு முறையாக எழுதிக் கொடுங்கள் என காவல்துறை சார்பாக கூறப்பட்ட நிலையில் நாளை முறையாக இது குறித்து எழுதி கொடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். மேலும் இவை அனைத்தும் காரணம் முதலாளிகள் தரப்பினரே என்றும் பூர்வ குடி மக்களை வெளியேற்ற இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறினார்