தேனி மாவட்டத்தில் தவெக டபுள் வெற்றி!.. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் இதோ!...

1 month ago 5
ARTICLE AD

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, தவெக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் 108  சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதே போல் திமுக 73 இடங்களிலும் அதிமுக 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு பகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவை சேர்ந்த சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை தொடர்ந்து, தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சபரி ஐயங்கரன் 85,656 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விசிக வேட்பாளரை விட 19,321 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  இதேபோல் கம்பம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜெகநாத் மிஸ்ரா 85,394 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சபரி ஐயங்கரனுக்கு தேர்தல் அலுவலர் வெற்றி சான்றிதழை வழங்கினார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களில் இளம் வயதில் வெற்றி பெற்ற வேட்பாளராக சபரி ஐயங்கார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபரி ஐயங்கரன் வெற்றி பெற்றது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனது வெற்றியை தளபதிக்கு சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்தார். கடவுளுக்கும், தளபதிக்கும், பெரியகுளம் தொகுதி மக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு எனது வெற்றிக்காக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இதேபோல் 6 முறை கம்பம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த ராமகிருஸ்ணனை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா 85,394 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 751 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கம்பம் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு தேர்தல் அலுவலர்கள் வெற்றிக்கான சான்றிதழ்களை வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெகநாத் மிஸ்ரா என்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் 50 கோடிக்கு மேல் செலவு செய்து என்னுடைய வெற்றியை தடுக்க திட்டமிட்டார்கள் ஆனால் மக்கள் மாபெரும் சக்தியாக உருவெடுத்து மாற்றத்தை கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு எடுத்துக்காட்டாக கம்பம் தொகுதியில் நிச்சயமாக செயல்படுவேன் என்று தெரிவித்த அவர், விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள். அதற்கு ஏற்றார் போல் நல்ல அமைச்சரவை அமைத்து மக்களுக்காக சேவை செய்வார் என தெரிவித்தார்.

Read Entire Article