துறையூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் 50 பவுன் நகைகள் கொள்ளை

2 days ago 2
ARTICLE AD

தஞ்சாவூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன்கள் சிவகுமார், சசிகுமார். இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சிவகுமார் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். சசிகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் சசிகுமார் மனைவி வீட்டை பூட்டி விட்டு உள்ளூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று 8ம் தேதி காலை வீடு திரும்பிய சசிகுமார் மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 44 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அருகில் உள்ள  சிவகுமார் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு 6 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சசிகுமார் மனைவி கொடுத்த தகவலின்பேரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் துறையூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டத்தில் 45 பவுன் நகைகள் கொள்ளை

இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே நீதிமன்ற தலைமை எழுத்தர் வீட்டில் 45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் சீமான் என்கின்ற அணில்குமார். இவர் அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளி ஜெயங்கொண்டம் யூனியன் அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் மர்ம நபர்கள் வீடு புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை கடப்பாரையால் நெம்பி அதிலிருந்து 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் ஆதாரங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயங்கொண்டத்தில் நகை திருடிய 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(46). விவசாயியான இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார்.

பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து மகன் உத்திராபதி (55) மற்றும் கொள்ளிடம் கீழவெள்ளம் தைக்கால் கிராமத்தைச் சேர்ந்த  கனகசபை மகன் ராஜகோபால் (43) ஆகிய இருவரும் திருட்டு  சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு பவுன் தங்கச் செயினை  போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள ஒரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Read Entire Article