தீப்பிடித்த றுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...

1 week ago 4
ARTICLE AD

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அ.ரஜபு நிஷாவை ஆதரித்து, செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு அனல் பறக்கும் உரையை ஆற்றினார்.

திராவிடக் கட்சிகள் மற்றும் விஜய்க்கு நேரடி சவால்

மக்கள் மத்தியில் உரையாற்றிய சீமான், திராவிட கட்சிகள் இலவச திட்டங்களை அள்ளி தெளிக்கின்றன. இந்த திட்டங்களுக்கான பணத்தை எங்கிருந்து எடுப்பீர்கள்  என்பதை மக்கள் முதலில் அவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அவர்கள் மக்களுக்கு விளக்கம் வேண்டும் என தெரிவித்தார்.

"தனித்துப் போட்டி தனித்து போட்டி என மேடைக்கு மேடை தப்பட்டம் அடித்து கொண்ட விஜய் தற்போது, மாற்றுக் கட்சிகளில் இருந்து வேட்பாளர்களை இழுத்து பெரும் கூட்டணி அமைத்துள்ளார்" சீமான் விமர்சித்தார்.
தான் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற சொல்வே மண்ணில் இருக்காது. மக்களை பொறுப்பற்றவர்களாக  மாற்றமட்டேன் என உறுதி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தரமான கல்வி உயர்ந்த மருத்துவம், தூய குடிநீர் இந்த மூன்றும் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என தெரிவித்தார்.

சிறுபான்மையினர் விவகாரம்: சர்ச்சைப் பேச்சு

சிறுபான்மையினர் என்ற அடையாளம் குறித்து அனல் பறக்கும் உரை நிகழ்த்திய சீமான்  சிறுபான்மையினர் என யார் கூறினாலும் அவர்களை காலணியால் அடியுங்கள் என தெரிவித்தார்.
இதற்காக எத்தனை வழக்குகளை வேண்டுமானால் நான் எதிர்கொள்ளத் தயார் எனவும், உண்மையில் ஸ்டாலின், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களே சிறுபான்மையினர் என்றும் மக்கள் அல்ல என்றும் தெரிவித்தார்.

சாராய வருமானம் vs விவசாயம்:

மதுபான விற்பனை மூலம் வரும் வருமானத்தை விட, ஆடு மாடு, விவசாயத்தை  வளர்ப்பதன் மூலம் அரசுக்கு அதிக வருமானம் ஈட்ட முடியும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்தார்.

Read Entire Article