இந்த தீபாவளிக்குப் புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? புதிய காருக்கு எப்படி பம்பர் தள்ளுபடியைப் பெறுவது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவில் நவராத்திரி, தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளின் போது மக்கள் அதிகம் கார் வாங்குவதால், ஆட்டோமொபைல் துறைக்கு இது மிகவும் லாபகரமான காலமாகும். நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்தான் இதற்கு முக்கியக் காரணம். எனவே, நீங்கள் இந்த தீபாவளிக்குக் கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், எளிதாகத் தள்ளுபடி பெறும் வழிகளைப் பார்ப்போம்.

சலுகைகளைக் கவனித்து வாருங்கள்

கார் நிறுவனங்கள் பண்டிகைகளின்போது பல சலுகைகளை வழங்குகின்றன. எனவே, சரியான சலுகைகளைக் கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஷோரூம்கள் மட்டுமின்றி, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் சலுகைகளைச் சரிபார்க்கவும். குறிப்பாக, நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களிலும், தீபாவளி பண்டிகையின்போதும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தள்ளுபடிகளை வழங்குகின்றன.

பல கார் டீலர்களிடம் பேசுங்கள்

எப்போதும் ஒரேயொரு கார் டீலரை மட்டும் நம்பியிருக்காமல், வெவ்வேறு ஷோரூம்களுக்குச் சென்று விசாரியுங்கள். இதன்மூலம் பல்வேறு ஷோரூம்களில் உள்ள சலுகைகள் மற்றும் காரின் விலையை உங்களால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். எந்த ஷோரூமில் குறைவான விலையில் கார் கிடைக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.

பழைய ஸ்டாக்கை தேர்ந்தெடுங்கள்

பழைய ஸ்டாக் என்பதால் ஒரு கார் மோசமானது என்று அர்த்தமல்ல. புதிய மாடல் கார்தான் வேண்டும் என்றில்லாமல், ஒரு காரை வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். நீண்ட நாட்களாக விற்பனையாகாத கார்களை விற்க, பண்டிகைக் காலங்களில் டீலர்கள் பெரிய தள்ளுபடியை வழங்குவார்கள். இதன்மூலம் குறைந்த விலையில் நல்ல கார் கிடைக்கும்.

எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை

உங்களின் பழைய கார் பழுதடைந்திருந்தாலோ அல்லது அடிக்கடி பராமரிப்புச் செலவு வைத்தாலோ, பண்டிகைக் கால எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்வது லாபகரமானது. பழைய காரைக் கொடுத்துவிட்டுப் புதிய காரை வாங்கும்போது, புதிய காரின் விலையில் உங்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும்.

ஷோரூமுக்கு வெளியே இன்சூரன்ஸ் பெறுங்கள்

கார் வாங்குவதோடு செலவுகள் முடிந்துவிடுவதில்லை. அதற்கான இன்சூரன்ஸை கார் வாங்கிய ஷோரூமில்தான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை; அது உங்கள் விருப்பம்தான். இணையதளங்கள் மற்றும் சந்தையில் ஒப்பிட்டுப் பார்த்து, குறைந்த விலையில் நீங்கள் இன்சூரன்ஸ் பெறலாம்.

அதேபோல், ஃப்ளோர் மேட்கள், சீட் கவர்கள், கார் பெர்ஃபியூம், பாடி கவர் மற்றும் குஷன் போன்ற ஆக்சஸரீஸ்களையும் ஷோரூம்களை விட வெளியே குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.