சென்னை: தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை தீபாவளி திருநாளை முன்னிட்டு முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

தீபாவளி பண்டிகை - 108 அவசர ஆம்புலன்ஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை தீபாவளி திருநாளை முன்னிட்டு முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைந்து 108 அவசர சேவை 24 மணி நேரமும் பொதுமக்கள் நலனுக்காக முழுத் தயார்நிலையில் உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 500-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்படும் அவசர நிலைகளுக்கு உடனடி பதில் அளிக்க தயாராக வைக்கப்பட்டுள்ளன.

அவசர தேவைக்கேற்ப திடீர் நடவடிக்கை எடுக்கவும், ஹாட்ஸ்பாட் சாலைகளின் தன்மைகளை கருத்தில் கொண்டு ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இருவரும் முழுத் தயார்நிலையில் உள்ளனர். மேலும், அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைக்கப் பயன்படும் கருவிகள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அவசர மருந்துப்பொருட்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள், 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அவசர நிலைமைகளில் மட்டுமின்றி, பிற மருத்துவ தேவைகளுக்கும் முறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். பண்டிகைக் காலங்களில் தீயணைப்பு அல்லது பிற அவசர உதவிகள் தேவைப்பட்டால், 108 என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளுதல் போதுமானது உடனடியாக அருகிலுள்ள சேவை மையத்திற்கு தகவல் அனுப்பப்படும்.

எனவே, அனைத்து பொதுமக்களும் தீபாவளியை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமெனவும், 108 அவசர சேவை எப்போதும் உங்களுடன் இருக்கும் நண்பனாக உங்கள் அவசர தேவைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய மேலாண்மை அம்சங்கள்:

தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கும் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள், அவசரநிலைகளுக்கு முக்கிய சேவையை உடனடியாகவும் திறமையாகவும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, பாதுகாப்பான தீபாவளி 2025க்கான 108-ன் சிறப்புத் தயார்நிலைகள்:-

அனைத்து ஆம்புலன்ஸ்களும் மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட இடங்களில் 24 மணிநேரமும், அனைத்து நாட்களிலும் 100% தயார்நிலைல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட ஹாட்ஸ்பாட்களில் (வாகன நிறுத்துமிடம்) அனைத்து ஆம்புலன்ஸ்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன மற்றும் திருவிழாவின் முந்தைய நாள் மற்றும் அடுத்த நாளுக்கு இவைகள் திட்டமிடப்பட்டுள்ளன

அனைத்து மாவட்டங்களிலும் 24/7 நேரங்களில் போதுமான 108 உதவிகாப்பு வாகனத் தயார்நிலையுடன் மேற்கொள்ளப்படுகிறது

பொதுமக்களுக்கு விரைவான பதிலளிப்பதற்காக 108-ன் மாநில கட்டுப்பாடு அறை GPS அடிப்படையிலான இயங்கும் 108 அவசர ஆம்புலன்ஸ் உதவி ஒதுக்கீடு, அனைத்து அவசரநிலை அழைப்புகளுக்கும் இவை தயார் நிலையில் எப்பொழுதும் உள்ளது.

108 ஆம்புலன்சில் உள்ள மருத்துவ உபகரணங்களின் பணி நிலை, அவசரகால மருந்துகளின் கிடைக்கும் தன்மையை உறுதி செய்தல் ஆகியவை அனைத்தும் 108 ஆம்புலன்ஸ் மாவட்ட செயலாக்கக் குழுவால் முறையாகவும் உணர்வுபூர்வமாக கண்காணிக்கப்படும்.

அனைத்து 108 இலவச ஆம்புலன்ஸ்களிலும் தீ/தீக்காயங்கள் தொடர்பான அவசரநிலைகளைக் கையாளத் தயாராக உள்ளது.

அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட சாலைகளின் குறுகிய பாதைகளில் அவசர தீக்காயங்களைச் சமாளிக்கம் சேவையை துரிதமாக செயல்பட அவசர 108 பைக் ஆம்புலன்ஸ்கள் (FR-முதல் பதிலளிப்பவர்கள்) நிறுத்தப்படும்.

முக்கியமான 108 அவசர அழைப்புகளுக்கு குறிப்பாக பாதிக்கப்பட்டவர் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சை பரிந்துரைகளுக்காக (IFT) இடமாற்றம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும், இவை அனைத்தும் மருத்துவ அதிகாரிகள் ஆலோசனைகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டு மேலாண்மை செய்யப்படும்

108 அவசர ஆம்புலன்ஸ் மாவட்ட செயலாக்கக்குழு மற்றும் ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களுக்கு அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படுமாயின் பாதுகாப்பிற்காக காவல்துறையின் உதவியைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது .

வாகனங்களின் அவசரதேவை மற்றும் எதிர்பாராத வாகனங்களில் செயலிழப்புகளைச் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புகளை சமாளிக்க அதன் இயந்திரக் குழுவுடன் ஒருங்கிணைப்பு எப்பொழும் கண்கணிக்கப்படும்.

EMS-108 இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அதன் மாவட்ட கள செயல்பாட்டுக் குழுவிலுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவத் துறையுடன் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள் துறைகள், மருத்துவ சேவைகள் இணை இயக்குநர், மாவட்ட சுகாதார அதிகாரி, பேரிடர் மேலாண்மை துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் மற்றும் பாதுகாப்புகளின் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும். EMS 108 சேவை செயல்பாடுகளை எந்த இடையூறும் இல்லாமல் இயக்க அதன் மனிதவளம் கிடைப்பதை உறுதி செய்தல்.

மேலும் EMS 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை மக்களுக்காக அளித்திட உறுதிசெய்து, இந்தத் திட்டங்கள் அடைய வேண்டிய நோக்கங்களைக் கொண்டுள்ளன, இந்த தீபாவளி பண்டிகையை பொதுமக்களுக்கு இனிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் அனைவருக்கும் அமையும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது .