காரல் மார்க்ஸ் பிறந்த நாள்

உலகப் பேரறிவாளரும் பொதுவுடமை தத்துவப் பேராசானுமான தோழர் காரல் மார்க்ஸ் பிறந்த நாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன் பேசியதாவது ;

கார்ல் மார்க்ஸ் பிறந்த நாளில் அவரை நினைவு கூறுகிறோம். மார்க்ஸ் என்னும் சொல்லே பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. ஆனால் தொழிலாள வர்க்கத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தியவர் எனவும்
அவரது திசை தான் மானுட திசையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சண்முகம் பேசியதாவது ;

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களின் ஒருவராக காரல் மார்க்ஸ் இன்றும் போற்றப்படுகிறார்.
உலகம் முழுவதும் உள்ள விடுதலை அவர்களின் முன்னேற்றம் உள்ளிட்டவைகளை வளர்த்தெடுக்க இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து பாடுபடும்

சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் பேசி முடிந்த உடன் தவெகவிற்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்வி எழுப்பிய போது , உடனே விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நான் பேசுகிறேன் என கூறி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்

தேர்தல் முடிவு திமுக கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் எந்த வகையிலும் மதவாத சக்திகள் வந்து விட கூடாது நுழைய கூடாது என நினைத்தோம் அது போல் நடந்துள்ளது. நாங்கள் எடுத்த மாபெரும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. எங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை விசிக , கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிப்பீர்களா , முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு

இது வரை அது குறித்து எதுவும் சிந்திக்கவில்லை, முடிவும் எடுக்கவில்லை. இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் நீண்ட காலமாக மதசார்பற்ற அரசியல் களத்தில் ஒன்றாக பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் இணைந்தே முடிவு எடுப்போம்

தவெக அழைத்தால் அங்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு ;

உங்கள் யுகத்திற்கு எல்லாம் பதில் கூற முடியாது என தெரிவித்தார்.