தெலங்கானா மாநிலத்தில் தற்கொலை என நினைக்கப்பட்ட இளம்பெண் மரணம் ஒரு கொலை என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சினிமாவை மிஞ்சும் அளவுக்கு மிக கொடூரமான சம்பவங்கள் இந்த விஷயத்தில் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் சுல்தானாபாத் மண்டலத்தின் கரேபள்ளியைச் சேர்ந்தவர் ஜெட்டி நவீன். இவர் நாஸ்பூரில் உள்ள ஸ்ரீராம்பூர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒப்பந்த விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே கல்லூரியில் டிப்ளோமோ படிக்க வந்த ந்த்ரா அக்ஷிதாரானியை சந்தித்துள்ளர். அவரிடம் பேசி பேசி தன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இதற்கிடையில் அக்‌ஷிதா பொறியியல் படித்த நிலையில் இண்டர்ன்ஷிப் பயிற்சி பெற கோதாவரிகானிக்கு வந்துள்ளார். அப்போது சிங்கரேனி பகுதியில் நடைபெறும் சுரங்க பணியை மேற்பார்வையிடும் பொம்மகாந்தி ரவிக்குமார் என்பவருடன் அக்‌ஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் நவீனுக்கு தெரிந்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த அவர், அக்‌ஷிதாவை சந்திக்கும்போது அவருக்கே தெரியாமல் செல்போனில் ஒரு செயலியை நிறுவி கண்காணிக்க தொடங்கினார். அக்‌ஷிதாவின் போன் கால், மெசெஜ் என அனைத்தும் நவீனுக்கு தெரிந்தது.

அதில் பொம்மகாந்தி ரவிக்குமாருடன் அக்‌ஷிதா நெருக்கமாக பழகுவதை கண்டுபிடித்தார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த நவீன், அக்‌ஷிதாவை வைத்து ரவிக்குமாரை பழிவாங்க முடிவெடுத்தார். அதன்படி, சுரங்க நிர்வாகத்தின் மேலாளரிடம் ரவிக்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரை அளிக்க வைத்தார். போதிய ஆதாரம் இல்லாததால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் அக்‌ஷிதா வீட்டுக்கு விஷயத்தைக் கொண்டு சென்றார். இதனால் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை ஒரு கம்பியூட்டர் சென்டரில் வேலைக்கு அனுப்பி விட்டனர். ஆனாலும் நவீனுக்கு கோபம் அடங்கவில்லை.

அதன்படி செப்டம்பர் 12ம் தேதி நண்பர் ஒருவரிடமிருந்து கஞ்சா பெற்ற நவீன் அதனை ஒரு பாட்டிலில் நிரப்பினான். அக்‌ஷிதாவை காரில் அழைத்துக் கொண்டு ஓரிடத்திற்கு சென்ற அவர், ரவிக்குமாரை எதுவும் செய்ய மாட்டேன். எனக்கு நீ ஒன்றை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு முன்பாக கஞ்சா கலந்த தண்ணீரை அவரை குடிக்க வைத்து போதையேற்றியுள்ளார். பின்னர் தன்னுடைய சாவுக்கு ரவிக்குமார் தான் காரணம் எழுத வைத்து விட்டு திட்டமிட்டபடி கொலை செய்துள்ளார். தொடர்ந்து நவீன் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

அக்ஷிதாவின் கைப்பேசியில் இருந்த கடிதத்தின் புகைப்படம் அடிப்படையில் இது தற்கொலை என போலீசார் கருதினர். ஆனால் சிசிடிவி காட்சியில் சாலை சந்திப்பு ஒன்றில் நவீனின் காரில் அவர் ஏறும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருக்க அவர் சிக்கிக் கொண்டார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இது திட்டமிட்ட கொலை என தெரிய வந்தது. இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.