திருமங்கலம் பள்ளி பேருந்தில் தீ விபத்து: 25 மாணவர்கள் உயிர் தப்பினர்! அதிர்ச்சி தரும் காரணம்?

3 weeks ago 2
ARTICLE AD

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 15 நிமிடமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

பேருந்தில் உள்ள டீசல் டேங்க் பகுதியில் இருந்து திடீர் புகை ஏற்பட்டு, தீப்பிளம்பு வந்தது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில்திருமங்கலத்தில் உள்ள பி கே எம் பள்ளியின் ஆரம்பப்பள்ளி பேருந்து 25 பள்ளி மாணவிகளுடன் வந்து கொண்டிருந்தபோது, பேருந்தில் உள்ள டீசல் டேங்க் பகுதியில் இருந்து திடீர் புகை ஏற்பட்டு, தீப்பிளம்பு வந்தது.

15 நிமிடமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்

அதனைத் அறிந்த பள்ளி பேருந்து ஓட்டுனர் ரவிச்சந்திரன், திடீரென வண்டியை நிறுத்தி 25 பள்ளி மாணவ மாணவிகளை உடனடியாக கீழே இறக்கி விட்டு தொலைவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து திடீரென தீ பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கின. இதனால் நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து திருமங்கலம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 15 நிமிடமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

Read Entire Article