திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடையானது நடைமுறைக்கு வந்தது- பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து இரசீது பெற்று செல்கின்றனர்.

செல்போன் கொண்டு செல்ல தடை

தமிழ்நாட்டில் முக்கியமான கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று செப்டம்பர் 1-ந்தேதி முதல் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அறநிலை துறை சார்பில் அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருக்கோயிலுக்குள் பக்தர்கள் கைபேசியினை கொண்டு செல்ல தடை விதித்தும், பக்தர்கள் கொண்டு செல்லும் கைபேசிகளை பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்து பாதுகாத்து மீள பக்தர்களுக்கு வழங்கிடும் நடைமுறையினை அனைத்து திருக்கோயில்களிலும் செயல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுக்கு இன்று வருகை புரியும் பக்தர்கள் கொண்டு வரும் கைபேசியினை திருக்கோயிலுக்குள் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

கைபேசி பாதுகாப்பு பெட்டக வசதி சிசிடிவி கேமரா வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலின் நுழைவு பகுதியின் முன்புறம் உள்ள காலணி பாதுகாப்பு மையம் அருகில் கைபேசி பாதுகாப்பு பெட்டக வசதி சிசிடிவி கேமரா வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் அருகே கைபேசி பாதுகாப்பு பெட்டகம் நிலையம் 2 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலையம் 1ல் 354 கைபேசி லாக்கரும் நிலையம் 2ல் 200 கைப்பேசி லாக்கரும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு லாக்கரில் 10 செல்போன்கள் வீதம் வைக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் கைபேசி ஒன்றுக்கு ரூ.5 வீதம் கட்டணம் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்கின்றனர்‌. இன்று முதல் அனுமதியின்றி கோயிலுக்குள் எடுத்துச்சென்று கைபேசி மூலம் போட்டோ வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது காவல்துறை மூலம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. கைப்பேசி பாதுகாப்பு அறையில் இணையதள வசதி சரிவர இயங்காமல் சிறிது நேரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். பிறகு விரைவாக சரி செய்யப்பட்டடதால் தங்களது செல்போன்களை லாக்கரில் வைத்து ரசித்து பெற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தடை நல்லது

இது குறித்து திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரேம் கூறுகையில்..," மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கேமராபோன்களுக்கு தடை விதித்தது வரவேற்கதக்கது. கேமரா இல்லாத போன் அனுமதி என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார், இது நல்ல முடிவு. ஏனென்றால் மனதளவில் ஒரு நிம்மதியான கடவுள் வழிபாடு நடைபெறும். தேவையற்ற போன்கால்கள் தவிர்க்கலாம். கோயில்களுக்கு செல்வதே ஒரு மன நிம்மதி மற்றும் கடவுள் வழிபாடு தான். அந்த சிறிதளவு நேரத்தில் மொபைல் போன் இல்லாமல் இருப்பது நல்லது" என்று தெரிவித்தார்.

தடையை நீக்க கோரிக்கை

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் எட்டிமங்கலம் ஸ்டாலின் பாஸ்கரன் கூறுகையில்..," தற்போதைய சூழ்நிலையில் 98% அனைவரும் ஸ்மார் போன்கள் தான் வைத்துள்ளனர். இதனால் சாமி கும்பிட வரும் பக்தர்கள், கூடுதலாக செல்போன் வைக்க காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் கோயிலுக்கு நடைபெறும் லஞ்சம் போன்ற குற்றங்கள் சுகந்திரமாக நடைபெற வழி செய்கிறது. அதிகாரிகள் பக்தர்களிடம் கடுமையாக நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. 5 ரூபாய் பணத்திற்காக இப்படியான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. நமது கட்டட கலை வெளியில் தெரியாமல் அங்கேயே தேங்கி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விசயத்தில் அரசு மீண்டும் பரிசீலனை செய்து தடையை நீக்க வேண்டும்" என்றார்.