"திருப்பத்தூரை பின்னுக்கு தள்ளிய திமுக அரசு!" - முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி காட்டம்

1 month ago 7
ARTICLE AD

அதிமுக ஆட்சியில் வளர்ச்சியில் சென்ற திருப்பத்தூர் மாவட்டம் கடந்த  5 ஆண்டுகளில் பின்தங்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார களம் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், அனைத்து கட்சியினரும், தீவிரமாக பிரச்சாரம் மேற்க்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில், பல்வேறு சிறப்புகளை இந்த  திருப்பத்தூர் மாவட்டம் பெற்றது,
திருப்பத்தூர் மாவட்டத்தை பிரித்து அனைத்து கிராமங்களுக்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு சேர்த்தது அதிமுக அரசு தான், அதிமுக ஆட்சியில் தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாநில கிராம சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டது, மேலும் பல்வேறு பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பள்ளி கள் தரம் உயர்த்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது, சொந்த செலவில் அரசு பள்ளியில் கலையரங்கம் கட்டிக்கொடுத்துள்ளேன்.

கடந்த திமுக ஆட்சியில் கிராம சாலைகள் மேம்படுத்தபடவில்லை, கடந்த அதிமுக ஆட்சியில் வேகமாக வளர்ந்த திருப்பத்தூர் மாவட்டம், கடந்த திமுக ஆட்சியில் பின்தங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு செயல்படுத தவறவிட்டது புதிய திட்டங்கள் இல்லை. மேலும் செட்டேரி அணைக்கு தண்ணீர் கொண்டு வரவில்லையென்றால், பதவியை ராஜினாமா செய்வேன் என ஜோலார்பேட்டை திமுக  சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கூறினார்,

வாய் வழியில் சொன்னார்கள், ஆனால் இதுவரையில் செட்டேரி அணைக்கு தண்ணீர் கொண்டு வரவில்லை, என்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக நான் என் மக்களுக்கு எதையும் செய்யவில்லை, கடந்த அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நான் நிலைத்து நிற்கும், வரலாற்று திட்டங்களை கொடுத்துள்ளேன்”  எனக் கூறினார்.

Read Entire Article