தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி கோட்டம்

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கல்லிடைக்குறிச்சி கோட்டம், கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை (24.9.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன்குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.