திருக்காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் தேதி அறிவிப்பு - மகிழ்ச்சியில் தேனி மக்கள்

9 months ago 6
ARTICLE AD

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவில். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உத்தமபாளையம் நகர சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கும் தென் காலஹஸ்தி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஞானாம்பிகை திருக்காளாத்தீஸ்வரர் கோவில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாகும்.

வரலாறு

நாயக்கர்கள் ஆட்சிக் காலகட்டத்தில் புகழ் பெற்ற ராணிமங்கமாளின் படைப் பொறுப்பை ஏற்று வந்தவர் கொண்டம நாயக்கர். இவர் காளஹஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் வயதான காரணத்தால் காளஹஸ்தி செல்ல முடியாமல் அவதிப்பட்டார். இவரின் நிலையை அறிந்த காளாத்தீஸ்வரர், அவர் இருக்குமிடத்திலேயே கோவில் அமைத்து வழிபடலாம் என்றும், இங்கு வழிபட்டால், காளஹஸ்திக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும் அருளினார் என்பது ஐதீகம். உடனே அவர் இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் பூஜையா நாயக்கரிடம் தெரிவித்தார். பாளையக்காரர் அங்கே ஒரு கோவில் அமைத்துக் கொடுத்தார். இதுவே தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் இக்கோவில் ஆகும்.

ஞானாம்பிகை

சிவனுக்குச் சிலை செய்த மன்னர் அம்மனுக்குச் சிலை அமைக்கப் பல முறை முயன்று தோல்வியுற்றார். இதனால் அம்பிகை இல்லாத கோவிலாகச் சில காலம் இருந்தது. பிறகு கொண்டம நாயக்கரின் கனவில் தோன்றிய சிவன் முல்லை ஆற்றில் அம்பிகை வருவாள் என்றாராம், அதன்படி ஆற்றில் ஒரு கூடை மிதந்தது வந்தது அதனுள் அம்மனின் சிலையைக் கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து அம்மனுக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். இவ்வம்மன் இங்கு புகழ் பெற்றவர். பலருக்கு ஞானாம்பிகை கோவில் என்றால் தான் தெரியும் என்ற அளவுக்கு புகழ் பெற்றவர் . அம்மனுக்குப் பக்கத்தில் முருகன் காட்சி அளிப்பது இங்கு சிறப்பாகச் சொல்லப்படுகிறது. தாய், சேய் நலன் விரும்புவோர் இங்கு வந்து வழிபட்டால் உறவுப்பாலம் நன்கு அமையும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகின்றது.

ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி:

ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். ராகுவும், கேதுவும் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளி உள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மாசி மகத் தேர் வெள்ளோட்டம்

இக்கோவில் மாசி மகத் தேரோட்டம் வரும் மார்ச் 12 ல் நடக்க உள்ளதை முன்னிட்டு, நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது.  இக்கோவிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசியில் மாசி மாத தேரோட்டமாக நடைபெறும். கடந்த 2020க்கு பின் பல்வேறு காரணங்களால், தேரோட்டம் நடக்க வில்லை.

இந்தாண்டு வரும் மார்ச் 12ல் தேரோட்டம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. மார்ச் முதல் தேதி கொடி ஏற்றத்துடன், நிகழ்ச்சிகள் துவங்க உள்ளன. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் மண்டகப்படி நடைபெறும். விதவிதமான அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடக்க உள்ளது. இதற்கான வெள்ளோட்டம் தற்போது நடைபெற்றது.  திரளான பக்தர்கள் திரண்டு நின்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். சுமார் 25 அடி துாரம் தேர் இழுக்கப்பட்டு, பின் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது.

Read Entire Article