"திமுகவை ஓட ஓட விரட்டும் விஜய்! பாராட்டிவிட்டு திடீரென 'செக்' வைத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!"

1 month ago 3
ARTICLE AD

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர், மறைந்த கே.டி.எஸ். மணி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, இந்துக்கள் அறக்கட்டளை சார்பில் 11 ஏழை குடும்பங்களுக்கு அனைத்து வகையான சீர்வரிசைகளுடன் மூங்கில் மண்டபம் பகுதியில் உள்ள சித்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இந்த விழாவில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

திமுக ஊழலை வெளிப்படுத்திய முதலமைச்சர் விஜய்

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், "வீராணம் திட்டம் முதல் விஞ்ஞான ஊழல் வரை வளர்ந்ததுதான் திமுக. ஊழல் குறித்துப் பேசினாலே ஆதாரம் கேட்கும் திமுகவுக்கு, தகுந்த ஆதாரங்களுடன் ஊழல்களை வெளிப்படுத்தியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். திமுக செய்த ஊழல்களைச் சொல்லி அவர்களை ஓட ஓட விரட்டும் விஜய்க்கு எனது வாழ்த்துகள். எதிர்காலத்தில் அரசியலில் ஊழல் செய்தால் அது நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும் என்ற பாடத்தை இளைஞர்கள் மத்தியில் அவர் புகட்டியுள்ளார்" என்று பாராட்டினார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் கூட்டணி குறித்து விமர்சனம்

தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு தவெகவுடன் கொள்கை முரண்பாடுகளும் மாற்றுக்கருத்துகளும் உண்டு. இருப்பினும், காவல்துறையைப் பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை இந்த அரசு சரியாகப் பராமரிக்க வேண்டும். சட்டமன்றத்தை நேரலை செய்து திமுகவினரை அங்கேயே தர்ணாவில் ஈடுபட வைக்கும் அளவுக்குச் செய்த சூழலில், ஊழலில் ஊறிய காங்கிரசுடன் தவெக கூட்டணி வைத்திருப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று குறிப்பிட்டார்.

குதிரை பேரமும் ஒருவகை ஊழலே

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தவெக மீது குதிரை பேரம் நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள நிலையில், "யாராக இருந்தாலும் குதிரை பேரம் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஊழலைப் பற்றிப் பேசும் முதலமைச்சர், இந்தக் குதிரை பேரத்தையும் ஒருவகை ஊழலாகக் கருதி அதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே அவர் உண்மையான ஊழல் எதிர்ப்பாளர் என்று மக்கள் நம்புவார்கள். இனிவரும் காலங்களில் அரசியலில் ஊழலே இருக்கக்கூடாது என்பதே எனது முதன்மை கோரிக்கை" என்று தெரிவித்தார்.

Read Entire Article