தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் வல்லத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்தார். மேலும் முதல்முதலாக வல்லத்தில் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மேயர் சண்.ராமநாதனை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மக்களின் மத்தியில் நன்கு அறிமுகமான மேயர் சண்.ராமநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தஞ்சை நகரில் நவீன உள்கட்டமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, மற்றும் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். "நம்ம வார்டு நம்ம மேயர்" திட்டம், குளங்கள் புனரமைப்பு, பூங்காக்கள் அமைத்தல் மற்றும் ஆதரவற்றோருக்கான நலத்திட்டங்கள் இவரது முக்கிய சாதனைகள் ஆகும். நம்ம வார்டு நம்ம மேயர்" என்ற திட்டம் மூலம் மக்களின் புகார்களை நேரடியாகக் கேட்டறிந்து, தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தஞ்சை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை மேலாண்மை செய்யவும், நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும் திட்டங்களைச் செயல்படுத்தினார். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஆதரவற்ற முதியோர்களுக்குத் தன் கைகளால் விருந்து வழங்கி, அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டது பரவலான வரவேற்பைப் பெற்றது.

மாநகராட்சியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக சண்.ராமநாதன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் ொதுமக்களிடமும் பிரச்சாரமும் மேற்ொண்டுள்ளார்.

அந்த வகையில் தஞ்சை அருகே வல்லத்தில் பேரூர் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். முன்னதாக வல்லம் அண்ணா சிலைக்கு வேட்பாளர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வல்லத்தில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் முதன்முதலாக வல்லம் பேரூராட்சியில்தான் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வல்லம் பேரூர் நகர செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் மாநகர பகுதி செயலாளர்கள், வல்லம் நகர கூட்டணி கட்சியினர், பிரிவு அணி செயலாளர்கள், இளைஞரணியினர், தொழில்நுட்ப அணியினர் கலந்து கொண்டனர்.